இன்றைய பெண்களில் பலர் குழந்தையின்மை பிரச்சனையால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். திருமணமாகி 10 ஆண்டுகளானாலும் குழந்தை இல்லை என்ற கவலை மனதிற்கு ரணமாக அமைகிறது. இந்த பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக என்ன தான் மருத்துவமனைக்குச் சென்றாலும், பெண்களின் உள்ளுறுப்புகள் அதிலும் கருப்பை வலுவாக இருக்க வேண்டும். உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளால் கருப்பை வலுவிழந்து விடுவதால் கரு உருவானாலும் 3 அல்லது 5 மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க:மாதவிடாயின் போது கர்ப்பபையில் உள்ள அழுக்கு, கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்ற இயற்கை சூரணம்
கருப்பை சுத்தமாக இல்லையென்றாலும் கரு சீக்கிரம் தங்காது. எனவே தான் பெண்களின் கருப்பை எப்போதும் வலுவுடனும், சுத்தமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இந்த நிலையில் கருப்பையை சுத்தம் செய்வதற்காக மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக வீட்டிலேயே இயற்கை வைத்திய முறைகளைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். அவை என்னென்ன? என்பது குறித்த தகவல்களை இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துக் கொள்ளுங்கள்.
கருப்பை சுத்தமாக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்:
கர்ப்ப காலத்தில் பெண்களில் சிலருக்கு, கருமுட்டை கோளாறு காரணமாக சில நேரத்தில் தானாகவே கரு கலைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்படி ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால் கீழ்வரக்கூடிய சில வைத்திய முறைகளைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
கருப்பட்டி உருண்டை:
கர்ப்பப்பையை சுத்தம் செய்வதற்கு வீட்டில் எளிதில் கிடைக்கும் பெருங்காயம், கருப்பட்டி, பூண்டு போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் தனித்தனியாக இடித்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகள் போட்டுக் கொள்ளவும்.
இவற்றை மாதவிடாய் சமயத்தில், காலையில் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலிமை அடையும். மேலும் கருச்சிதைவு மற்றும் கரு தங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் பாதிப்பைக் குறைக்கவும், கருப்பையில் உள்ள அழுக்குகளைப் போக்கவும் பேருதவியாக இருக்கும் என சித்த வைத்தியர்கள் கூறுகின்றனர்.
தேங்காய் பூ சம்பா அரிசி மற்றும் பனை வெல்லம்:
இயற்கையிலேயே கருத்தரித்தலை அதிகரிக்க வேண்டும் என்றால் நாட்டு மருந்துக்கடைகள் மற்றும் சில டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் தேங்காய் பூ சம்பா அரிசியைச் சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியவாசிய ஊட்டச்சத்துக்கள் கருப்பை வலிமைப் பெற உதவுகிறது.
கருப்பை சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் முன்னதாக தேங்காய் பூ சம்பா அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உடல் சூட்டைத் தணிக்கும் பனை வெல்லம், உடலுக்கு ஆற்றலை அளிக்கும் அக்ரூட் பருப்புகள் மற்றம் கருப்பையின் வலிமையை அதிகரிக்கும் ரோஜா பூ இதழ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:இளம்பெண்கள் அத்திப்பழ சாறு குடித்தால் இத்தனை நன்மைகளா? வாரத்திற்கு 3 முறையாவது இப்படி செய்து குடியுங்கள்
பின்னர் ஒரு கிண்ணத்தில் ஊற வைத்த அரிசி எடுத்துக் கொண்டு, அதனுடன் பனை வெல்லத்தை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும். இதோடு அக்ரூட் பருப்புகளை சிறிது சிறிதாக உடைத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பன்னீர் ரோஜா இதழ்களையும் உடன் சேர்த்து நன்கு கலந்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதவிடாய் சமயத்தில் தொடர்ச்சியாக சாப்பிடும் போது, கருப்பையில் எந்த அழுக்குகளும் தங்காது. தேவையில்லாதவற்றை வெளியேற்ற கருப்பை வலிமைப் பெற உதவியாக உள்ளது.
வல்லாரை சாறு:
வல்லாரையில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் பெண்களின் கருப்பை வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது. வல்லாரை கீரையை சாறாக எடுத்துக் கொண்டு மாதவிடாய் நாளிலிருந்து தொடர்ந்து 7 நாட்களுக்குப் பருகி வர வேண்டும். இவை கர்ப்ப்பபையில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு கருப்பை வலுவாக இருக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க:மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு நல்ல விஷயங்களா ? ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க
.
அரிசி மாவுடன் சுக்கு:
கருப்பை சுத்தமாக இருந்தால் மட்டுமே கருவைத் தாங்கக்கூடும். முன்பெல்லாம் நம்முடைய மூன்னோர்களுக்கு பெரும்பாலும் கருச்சிதைவு ஏற்பட்டதில்லை.இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு முறைகள். குறிப்பாக மாவுப்பொருட்களை அதிகளவில் சாப்பிட்டு வந்தனர். அரிசி மாவில் செய்யக்கூடிய கொழுக்கட்டை, புட்டு போன்றவற்றுடன் சுக்கு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து உட்கொண்டார்கள். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியது.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation