மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு நல்ல விஷயங்களா ? ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க

மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு கிலோ மாப்பிள்ளை சம்பா அரிசியின் விலை 200-300 ரூபாய் இருக்கும். ஜங்க் ஃபுட் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதை விட பயனுள்ளதாக செலவு செய்து ஆயுளை நீட்டிக்கலாம்.
image

மாப்பிள்ளை சம்பா அரிசி சாதாரண அரிசி வகை அல்ல. இது ஊட்டச்சத்து நிறைந்த உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வான அரிசி ஆகும். மாப்பிள்ளை சம்பா அரிசி தொடர்ந்து சாப்பிட்டால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். எடை இழப்பில் தொடங்கி சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதல், செரிமான ஆரோக்கியம் மேம்படுத்துதல் வரை மாப்பிள்ளை சம்பா அரிசியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. வழக்கமான வெள்ளை சாதத்தை விட மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஊட்டச்சத்து பன்மடங்கு அதிகம். இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக உணவுமுறையில் தொடர்ந்து சேர்த்து கொள்ளலாம். முறையாக சேமித்து வைத்தால் அறுவடை செய்த நாளில் இருந்து 6 மாதம் வரை இது கெட்டு போகாது.

mapillai samba rice

மாப்பிள்ளை சம்பா அரிசி ஊட்டச்சத்து மதிப்பு

100 கிராம் மாப்பிளை சம்பா அரிசியில் 180 முதல் 200 கலோரிகள் உள்ளன. 100 கிராம் மாப்பிள்ளை சம்பா அரிசியில் 3 கிராம் கொழுப்பு, 0 மில்லி கிராம் கொலட்ஸ்ரால், சோடியம் 3-6 மில்லி கிராம், பொட்டாசியம் 160-200 மில்லி கிராம், கார்போஹைட்ரேட் 56-60 கிராம், நார்ச்சத்து 6 கிராம், சர்க்கரை 1.5 கிராம், புரதம் 6 கிராம், இரும்புச்சத்து 0.5-0.9 மில்லி கிராம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி2, கால்சியம் 24-20 கிராம், பாஸ்பரஸ் 160-200 மில்லி கிராம், மெக்னீசியம் 32-48 மில்லி கிராம் அடக்கம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகள்

எடை இழப்புக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி

உடல் எடையை நிர்வகிக்க நார்ச்சத்து அவசியம் என நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு 100 கிராம் மாப்பிள்ளை சம்பா அரிசியிலும் 6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டால் உங்களுடைய வயிறு நீண்ட நேரம் முழுமையாக உணரும். இதனால் நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும். அது இறுதியில் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

மேலும் படிங்கவிளாம்பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா ? ஆஸ்துமா, செரிமானம், சரும பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

சர்க்கரை நோயாளிகளுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசியின் கிளைசெமிக் குறியீடு 83 மட்டுமே. அதை வேக வைத்த பிறகு 52 ஆக குறைந்துவிடுகிறது. மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவுகள் சட்டென அதிகரிக்காது. எனவே சர்க்கரை நோயாளிகள் மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து சாப்பிடலாம்.

செரிமானத்திற்கு உதவி

குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்க நார்ச்சத்து அவசியம். மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னை வராது.

இதய ஆரோக்கியம்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள வேதிச் சேர்மம் உடல் கொலட்ஸ்ராலையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவும். மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்த அளவுகளை சீராக வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். இவற்றின் ஊட்டச்சத்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதிர்ச்சியான தோற்றமும் தவிர்க்கப்படும். பல சினிமா நடிகர்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுவதாக தகவல் உண்டு. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி கொடுத்தால் எலும்பு வளர்ச்சி, மூளை செயல்பாடு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP