herzindagi
image

தொடை அரிப்பா? சரி செய்வதற்கான எளிய வீட்டு வைத்தியங்கள்

தொடைப் பகுதியில் ஏற்படக்கூடிய அரிப்பிற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காவிடில் தோல் சிவத்தல், புண் போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
Updated:- 2024-10-08, 23:55 IST

தொடைப் பகுதிகளில் ஏற்படக்கூடிய அரிப்பின் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆண்களை விட பெண்கள் அதிகளவில் இந்த பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். அதிக நேரம் நின்று கொண்டே வேலைப்பார்ப்பது, இறுக்கமான மற்றும் காற்றோட்டம் இல்லாத ஆடைளை அணியும் போது பாக்டீரியா தொற்றுகள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தொடை இடுக்குப் பகுதிகளில் அரிப்பு மற்றும் படர்தாமரை பிரச்சனை உண்டாகும். கை வைத்து சொரிய ஆரம்பித்தால், கையை எடுக்க முடியாத அளவிற்கு சொரிந்துக் கொண்டே தான் இருக்க நேரிடும். மற்றவர்களிடம் சொல்வதற்குக் கூட சங்கோஜமான சூழல் ஏற்படும். இந்த சூழலில் இதைத் தவிர்க்க பல வழிமுறைகளில் பின்பற்றுவோம்.

rashes

தொடை அரிப்பைக் குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்தியங்கள்:

கற்றாழை:

தொடைப்பகுதியில் ஏற்படக்கூடிய அரிப்பு, அழற்சி, படர்தாமரை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் முதலில் கற்றாழையைப் பயன்படுத்த முயற்சி செய்யவும். கற்றாழை ஜெல்லை எடுத்து அரிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக வெது வெதுப்பான நீரைக் கொண்டு கழுவினால் போதும். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இதனால் ஏற்பட்ட வலியையும் குறைக்க உதவக்கூடும்.

மேலும் படிக்க: விரைவான எடை இழப்புக்கு 'ஃபாஸ்ட் 800 டயட்' பிளான்- செம்ம ரிசல்ட் கொடுக்கும் - வேகமா செட் ஆகிருவீங்க!!!

சுடு தண்ணீர் மற்றும் உப்பு:

உப்பிற்கு பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடக்கூடிய பண்புகள் அதிகளவில் உள்ளது. தொடை இடுக்குகளில் ஏற்படக்கூடிய அரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சுடு தண்ணீரில் உப்பு கலந்து அரிப்பு ஏற்படும் இடங்களில் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் மருந்தகங்களில் அரிப்பைக் கட்டுப்படுத்த விற்பனையாகும் ப்ரத்யேக பவுடர்களைப் பயன்படுத்தவும்.

மேலும் படிக்க: எடை இழப்பு, சிறந்த செரிமானத்திற்கு இந்த 5 இலைகளை காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்கள்!

தேங்காய் எண்ணெய்:

தொடை பகுதியில் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படக்கூடிய அரிப்பு மற்றும் அதனால் அப்பகுதி முழுவமும் நீரின்றி உலர்ந்து ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை அங்கு பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் வீக்கம் மற்றும் வலிக்கு உதவியாக உள்ளது. எப்பொழுது எல்லாம் தொடைப் பகுதிகளில் அலர்ஜி மற்றும் வலியை உணர்கிறீர்களோ? அப்போது எண்ணெய்யை அப்ளை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: ஒரே மாதத்தில் 4 முதல் 5 கிலோ உடல் எடையை குறைக்கும் சூப்பர் வெயிட் லாஸ் டயட் பிளான்!

மஞ்சள்:

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டுள்ள மஞ்சள் சருமத்திற்கு மட்டுமலல, தொடை அரிப்பையும் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். ஆம் மஞ்சளில் உள்ள குர்குமின் பண்புகள் பாக்டீரிய தொற்றுகளைக் குணப்படுத்த உதவியாக இருக்கும். எனவே மஞ்சளில் தண்ணீர் கலந்து பேஸ்ட் போன்று உருவாக்கிக் கொள்ளவும். இதை அரிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் அப்ளை செய்து விட்டு வெதுவெதுப்பான நிரில் கழுவினால் போதும். அரிப்பு இருந்த இடம் தெரியாமல் பறந்தோடிவிடும்.

Image source- Google 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com