காரசாரமான உணவுகளை சாப்பிடுவது நமக்கு ருசியாக தோன்றலாம். எனினும் உடலில் உள் உறுப்புகளுக்கு காரசார உணவுகள் பாதிப்பை உண்டாக்கும். பொரித்த, வறுத்த, காரசாரமான உணவுகளை சாப்பிடும் போது நம் உடலுக்குள் சூடு அதிகரித்து இயல்பான வெப்பம் பாதிக்கப்படும். ஆயுர்வேதத்தில் இதை பித்த தோஷம் என்றழைக்கின்றனர். பெண்கள் காரசாரமான உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீர் கழித்தலின் போது பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், வறட்சி, அரிப்பு மற்றும் அசெளகரியத்தை உணரலாம். நாம் உட்கொள்ளும் உணவுகள் உடலின் சமநிலையை பாதிக்க கூடாது. ஆசைப்பட்டு சாப்பிடக் கூடிய காரசாரமான உணவுகள் உடலையும், மனதையும் பாதிக்கலாம். காரசாரமான உணவுகள் உடல் சூட்டை அதிகரித்து கல்லீரலில் அழுத்தம் கொடுத்து ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.
பெண்ணின் பிறப்புப்பு பகுதி pH அதிக உணர்த்திறன் கொண்டது. pH என்பது அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையின் குறியீடு ஆகும். அதிகளவு காரசார உணவுகளை சாப்பிடுவதால் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். உடலின் அசிடிட்டி அளவு அதிகரிக்கும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், தொற்று, பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல் உண்டாகும்.
இளநீர் குடித்து உடலை நீரேற்றமாக வைக்கலாம், நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம், உடல் சூட்டை தணிக்கும் சீரக தண்ணீர் குடிக்கலாம், கற்றாழை சாறு குடிக்கலாம். உலர் திராட்சை, ஊறவைத்த சப்ஜா விதைகள், ஏலக்காய் தண்ணீர், ரோஜா இதழ் டீ ஆகியவை உடல் சூட்டை குறைத்திடும்.
உடல் சூட்டை குறைப்பதற்கு யோகாசன பயிற்சி உதவும். உடலின் சூடு குறைவால் பெண்ணின் பிறப்புறுப்பு எரிச்சல் குறைந்திடும். மூச்சுப்பயிற்சி செய்வது நிச்சயம் சூட்டை குறைக்கும். அதேபோல பிறப்புறுப்பு பகுதியை மையப்படுத்திய யோகாசனங்கள் உடலுக்கு தளர்வை கொடுக்கும்.
இயற்கையாக கிடைக்கும் தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை பயன்படுத்தி பிறப்புறுப்பு பகுதி ஈரப்பதத்தை தக்கவைக்க முடியும். pH பாதிக்காத சோப், திரவங்களை பயன்படுத்துவத தவிர்க்க வேண்டும். வேப்பிலை தண்ணீர் பயன்படுத்துவது பிறப்புறுப்பு பகுதி தொற்றுகளை அகற்றி சுத்தப்படுத்தும்.
மேலும் படிங்க வாயு அடைப்பால் பலூன் போல் மாறிய வயிற்றை சரி செய்வதற்கு பாட்டி வைத்தியம் பின்பற்றுங்க
எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள், பழங்கள், தானிய வகைகளை சாப்பிட்டு உடலில் உள்ள நச்சுகளை நீக்கி பிறப்புறுப்பு பகுதி எரிச்சலை தடுக்கலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com