அந்தரங்க பகுதியைச் சுற்றி கருப்பாக உள்ளதா? நீக்குவதற்கான வழிமுறைகள்

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அந்தரங்க பகுதிக்கு சுற்றியுள்ள தொடைப்பகுதியில் கருப்பாக தெரியும். இதனால் ஏற்படக்கூடிய அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என அறிந்துக் கொள்ளுங்கள்.
image
image

கை, கால்கள் மற்றும் முகத்தில் சில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக கருமை நிறம் இருந்தால் அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். அதே சமயம் தொடைப் பகுதியில் அதுவும் அந்தரங்க பகுதிக்கு அருகில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கூச்சத்தின் காரணமாக அதற்குரிய சிகிச்சையை முறையாக எடுக்க மாட்டார்கள். குறிப்பாக அரிப்பு மற்றும் அலர்ஜி காரணமாக அந்தரங்க பகுதிக்கு சுற்றியுள்ள தொடைப்பகுதியில் கருமையான நிறம் ஏற்படும். வெளியில் தெரியாது என்று அலட்சியமாக விட்டு விட முடியாது. அப்படியென்றால் இதை தவிர்க்க என்ன செய்யலாம்? என கேட்கிறீர்களா? இதோ கருமையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள் இங்கே.

கருமையை நீக்க உதவும் தயிர்:

நாம் அன்றாட உணவுகளில் எடுத்துக் கொள்ளக்கூடிய தயிரில் இயற்கையாகவே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கருமை நிறம் ஏற்படுவதற்கு உதவக்கூடும் இறந்த செல்களை அகற்றவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவக்கூடும்.

உபயோகிக்கும் முறை;

இதுபோன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் தயிரை சிறிதளவு தண்ணீர் கலந்து அந்தரங்க பகுதியில் கருமை உள்ள இடங்களில் தடவிக் கொள்ளவும். அரை நேரத்திற்கு அப்படியே விட்டு விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தினசரி அல்லது வாரத்திற்கு இருமுறையாவது தொடர்ச்சியாக செய்யும் போது சருமம் பாதுகாப்போடு இருக்கும்.

கடலை மாவு:

அந்தரங்க பகுதியைச் சுற்றியும், தொடைப் பகுதியில் உள்ள கருப்பான நிறத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்தால், கடலை மாவை உபயோகிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் பால் கலந்து பேஸ்ட் போன்று குழைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தொடைப் பகுதியில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தைப் பாதுகாக்கிறது.

கற்றாழை:

பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் அந்தரங்க பகுதியில் ஏற்படக்கூடிய கருமையை நீக்க வேண்டும் என்று நினைத்தால் கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் கொலாஜன் சுரப்பை அதிகரித்து கருப்பான நிறத்தை நீக்க உதவுகிறது.

மேலும் படிக்க:நார்ச்சத்து முதல் வைட்டமின்கள் வரை; கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 வகையான காய்கறிகள்

கிருமி நாசினியான மஞ்சள்:

முக பொலிவிற்கு மட்டுமல்ல தொடைப்பகுதியில் உள்ள கருப்பான நிறத்தைப் போக்க வேண்டும் என்றால் மஞ்சளைப் பயன்படுத்தலாம். மஞ்சளுடன் தண்ணீர் கலந்து அப்ளை செய்யும் போது, இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கருமை நிறத்தைப் போக்க உதவுகிறது. தொடைகள் உரசி அதிக அரிப்புகள் ஏற்பட்டாலும் அதை சரிசெய்ய மஞ்சள் உதவுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP