herzindagi
image

தூங்கச் செல்வதற்கு முன்ளதாக ஒரு டம்ளர் பால் போதும்; உடல் ஆரோக்கியம் மேம்படும்! எப்படி தெரியுமா?

பாலில் அதிகளவு புரோட்டீன் மற்றும் லாக்டியம் போன்ற சத்துக்கள் மன அழுத்தத்தைக் குறைத்து இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவியாக உள்ளது.
Editorial
Updated:- 2025-12-01, 22:32 IST

நம்மில் பலருக்கு இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்ற பழக்கம் கட்டாயம் இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் இரவு நேர உணவைக் குறைத்து பால் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். தெரிந்தோ? தெரியாமலோ? பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பல விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கப்பெற்று வருகிறது. அப்படி என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே.

இரவில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • தினமும் இரவு நேரங்களில் பால் குடிக்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடலின் புரதங்கள், தசைகள், என்சைம்கள் வலுப்பெறவும் உதவியாக உள்ளது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக உள்ளது. மேலும் ஒரு கப் சூடாக பால் குடிக்கும் போது தேவையில்லாத நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும். இதனால் தேவையில்லாத உடல் நல பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • தினமும் நாம் குடிக்கும் பாலில் கால்சியம் மற்றும் பெரும்பாலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இவற்றை உணவு முறையில் வழக்கமாக்கிக் கொள்ளும் போது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இதோடு உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கப்பெறும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

 மேலும் படிக்க: சூப் குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

  • பால் புரதங்கள், தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது.  எனவே இரவில் அதை உட்கொள்வது ஊட்டச்சத்து மதிப்பைச் சேர்க்கிறது மற்றும் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
  • இரவு நேரங்களில் தூங்க செல்வதற்கு முன் பாலில் தேன் கலந்து குடிக்கும் போது, செரிமானம் சீராக இருக்க உதவியாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகள் வலுப்பெறவும் உதவியாக உள்ளது.
  • பாலில் புரோட்டீன் மற்றும் லாக்டியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கு பேருதவியாக இருக்கும்.
  • இரவு நேரங்களில் தொடர்ச்சியாக பால் குடித்து வரும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. மேலும் சருமத்தை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
  • பாலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

 மேலும் படிக்க:  குளிர்காலத்தில் அதிகம் பாதிப்புள்ளாக்கும் நுரையீரல்; பாதுகாக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

இதுபோன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பால் கொண்டிருப்பதால் உங்களுடைய அன்றாட உணவு முறையில் கட்டாயம் பாலைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இதுவரை இந்த பழக்கம் இல்லையென்றால் மறக்காமல் இனி உடல் ஆரோக்கியத்திற்காக பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்.

Image source - Freepik

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com