
உடல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைவாகக் கிடைக்க வேண்டும். நாம் உயிர் வாழ்வதற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் அதிகமாக தேவை என்ற அவசியமில்லை. மாறாக அனைத்தும் சம அளவில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் சில அறிகுறிகள் நமக்கு முன்னதாகவே தெரிந்துவிடும் எனவும் இதை அலட்சியமாக விடும் போது தான் பெரிய உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உடலில் வைட்டமின்கள், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் குறையும் போது உடல் சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இன்றைக்கு என்னென்ன அறிகுறிகள் என்னென்ன உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பாதிப்புகளில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு. இதனால் இரத்த சோகை மற்றும் எலும்புகளில் வலி, முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது தான் இந்த பாதிப்பைக் கண்டறிய வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படப்போகும் என்றால் முதலில் உடல் சோர்வு, தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை அலட்சியமாக எடுத்துவிடக்கூடாது. ஆரம்பத்திலேயே இந்த பாதிப்புகளை அடையாளம் கண்டு இரத்த சோகை பாதிப்பைத் தடுத்துவிட முடியும்.
மேலும் படிக்க: காலையில் வெறும் வயிற்றில் புதினா நீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்துக்கள் குறையும் போது, எவ்வித காரணமும் இல்லாத மனக்கவலை, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் அதிக வேலைப்பளுவால் மன உளைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு என்று அலட்சியப்படுத்தும் போதும் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தசை பலவீனம், உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆரம்ப காலத்தில் இவற்றைக் கண்டுக் கொள்ளாத போது தான் இப்பிரச்சனைகளுக்காக மருத்துவர்களிடம் சிகிச்சைக்காச் செல்ல நேரிடுகிறது.
உடலின் நரம்பு மண்டலங்கள் ஆரோக்கியமான செயல்படுவதற்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாதது. இதோடு மட்டுமின்றி உடலின் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது முதல் வளர்சிதை மாற்றத்தை சீர்ப்படுத்துவதற்கும் வைட்டமின் பி 12 உதவுகிறது. இச்சத்துக்கள் குறையும் போது உடல் சோர்வடைகிறது. இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்னதாகவே ஆரம்ப கால அறிகுறிகள் சில தென்படக்கூடும். குறிப்பாக கை, கால்களில் உணர்வின்மை, நரம்புகள் அவ்வப்போது வலி போன்ற பாதிப்புகள் அனைத்தும் வைட்டமின் பி12 பாதிப்பின் அறிகுறிகளாக உள்ளது.
சீரான இதயத்துடிப்பு முதல் தசை இயக்கம் சீராக இயங்குவதற்கும் உடலின் மெக்னீசியம் சத்துக்கள் தேவை. உடல் சோர்வு, தசைகள் வலுவிழப்பு போன்றவையெல்லாம் மெக்னீசியம் சத்துக்கள் குறைபாட்டின் ஆரம்ப கால அறிகுறிகளாகும். இதே போன்ற தசை இழப்புகள் உடலின் புரத சத்துக்கள் குறைபாட்டின் அறிகுறிகளாக உள்ளது. உடலின் நீர் மற்றும் எலக்ரோலைட்டுகள் குறையும் போது வாய் உணர்வதை விட கவனச்சிதறல், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக தோல், முடி மற்றும் நகங்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 7, வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து போன்ற பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் உங்கள் குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான சிம்பிள் டிப்ஸ்
இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உணவு முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முதல் நல்ல தூக்கம், போதுமான அளவு நீர் அருந்துதல் போன்ற அடிப்படை விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும். இதோடு மேல குறிப்பிட்டது போன்று சிறிய எச்சரிக்கைகள் மற்றும் அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடல் நலத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com