
நீரிழிவு நோய் (Diabetes) என்பது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு பொதுவான நிலையாகும். இதற்கு காரணம், கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாமல் இருப்பது அல்லது உடலால் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் இருப்பது ஆகும். இந்த நிலை அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். பெரும்பாலான நீரிழிவு வகைகள் வாழ்நாள் முழுவதும் நீடித்தாலும், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
நீரிழிவு நோய் பெரும்பாலும் மெதுவாகவே அதன் அறிகுறிகளை காண்பிக்க தொடங்கும். எனவே, உங்கள் உடலில் தோன்றும் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
சமீப நாட்களாக வழக்கத்திற்கு மாறாக உங்களுக்கு பசி எடுப்பதாக உணர்ந்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இன்சுலின் பற்றாக்குறையால் உடலால் குளுக்கோஸை சரியாக உறிந்து கொள்ள முடியவில்லை என்பதே இதற்கு காரணம். இதன் விளைவாக, உங்கள் செல்களுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காது. இதனால் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக பசியுடனும், பெரும்பாலும் தாகத்துடனும் உணர்வீர்கள்.

மேலும் படிக்க: நாவல் பழத்தின் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய குறிப்புகள்
உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமடைய வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் எடுத்துக் கொள்வது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துவதால், உடலின் இயற்கையான குணமடையும் செயல்முறையை பாதிக்கிறது.
மேலும் படிக்க: Kiwi Fruit Benefits in Tamil: ஆரோக்கியத்திற்கு கிவி பழத்தின் அற்புதமான நன்மைகள்
உங்கள் உடலால் குளுக்கோஸை திறம்பட உறிந்து கொள்ள முடியாத போது, அதற்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. இதனால் நீங்கள் வழக்கத்தை விட அடிக்கடி களைப்பாகவோ அல்லது சோர்வாகவோ உணரலாம். அடிக்கடி அல்லது காரணமின்றி உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அது நீரிழிவு நோயை குறிக்கலாம்.
நீரிழிவு நோய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால் காய்ச்சல், அடிக்கடி சளி பிடித்தல், சுவாச பிரச்சனைகள் அல்லது சிறுநீர் பாதை தொற்றுகள் போன்றவை உங்களுக்கு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவுகள் பாக்டீரியாக்கள் வளர ஏற்ற சூழலை வழங்குவதாலும், தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கிறது.

இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும் போது, அந்த அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டி அகற்ற உங்கள் சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இது குறிப்பாக இரவில், அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அடிக்கடி அல்லது வழக்கத்திற்கு மாறாக உணர்ந்தால், தாமதிக்காமல் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com