
சீரற்ற உணவு பழக்கம், மாசுபட்ட நீர் அல்லது வேறு சில காரணங்களால் உங்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த சூழலில் சரியான உணவு முறையை கடைபிடிப்பது விரைவில் குணமடைய உதவும். வயிற்றுப்போக்கு (Diarrhea) மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், நாம் என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று காணலாம்.
நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்:
வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அடிக்கடி கழிப்பறைக்கு செல்வதால், உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் (Electrolytes) அதிகமாக வெளியேறி நீரிழப்பு (Dehydration) ஏற்படலாம். இந்த இழந்த சத்துகளை ஈடுசெய்ய, நீங்கள் கட்டாயம் ஓ.ஆர்.எஸ் திரவங்கள் (Oral Rehydration Solutions) அல்லது வீட்டிலேயே தயாரித்த உப்பு-சர்க்கரை கரைசலை குடிக்கலாம். இது உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படும் போது, உங்களுடைய உணவு எளிமையானதாகவும், காரம் இல்லாததாகவும் இருத்தல் அவசியம். எண்ணெய் அதிகம் உள்ள மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த உணவும் வயிற்றை மேலும் பாதிக்கலாம்.
மேலும் படிக்க: வாய் துர்நாற்றம் பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம் இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
காரம் சேர்க்காத வேகவைத்த உருளைக்கிழங்கு இந்த நேரத்தில் மிகவும் நல்லது. இது குடலை தொந்தரவு செய்யாமல் நீங்கள் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவும். குறிப்பாக, இது எளிதாக செரிமானம் ஆகி விடும்.
இந்த நேரத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். நீங்கள் சூப் வகைகளை அருந்தலாம். காய்கறி சேர்க்கப்பட்ட சூப் வகைகள் குடலுக்கு இதமாக இருக்கும். ஆனால், இதில் கொழுப்பு இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். இவை, எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகின்றன. இந்த சூப்களில் கிரீம் அல்லது அதிக சுவை கூட்டும் பொருட்களை சேர்க்க வேண்டாம்.
இளநீர், திரவ உட்கொள்ளலை சீராக வைத்திருக்க உதவும். இதில் இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை இருப்பதால், அது நீரேற்றத்தையும், எலக்ட்ரோலைட்டுகளையும் வழங்குகிறது.

மேலும் படிக்க: சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்திய முறைகள்; இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்
வயிற்றை எரிச்சலடையச் செய்யும் சில உணவுகளை இந்த நேரத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, வயிறு மிகவும் உணர்திறன் (Sensitive) கொண்டதாக இருக்கும். எனவே, பின்வரும் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
இந்த நேரத்தில் பால் மற்றும் பிற பால் சார்ந்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள லாக்டோஸ், உங்கள் வயிற்றை மேலும் எரிச்சலடைய செய்யலாம். இது அதிக வயிறு உப்புசம் (Bloating) போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

எண்ணெய் நிறைந்த, காரமான மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட அனைத்தையும் தவிர்க்கவும். இதில் பொரித்த உணவுகள், சிப்ஸ், சாஸ்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அடங்கும். மேலும், காஃபினைத் (Caffeine) தவிர்க்கவும். ஏனெனில் இது வயிறை மேலும் பாதித்து, அடிக்கடி கழிவறைக்கு செல்ல வழிவகுக்கும்.
உங்கள் உணவு முறையை எளிமையாக வைத்திருப்பதே இதற்கான முக்கிய தீர்வாகும். ஏனெனில், நீங்கள் உண்ணும் உணவானது உங்கள் குடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com