herzindagi
image

மஞ்சள் மற்றும் உப்பு போதும்; நீண்ட நேரம் நிற்பதால் ஏற்படும் கால் வலி இனி இருக்காது!

நீண்ட நேரம் நிற்பதால் ஏற்படும் கால் வலியை சரி செய்ய மஞ்சள் மற்றும் உப்பைப் பயன்படுத்தி ஒத்தனம் கொடுக்கவும். இது கால்களில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி தசைகளைத் தளர்ச்சியடைய செய்து கால் வலியைக் குறைக்க செய்கிறது.
Editorial
Updated:- 2025-11-05, 15:04 IST

இன்றைக்கு வீட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், துணி மற்றும் நகைக்கடைகளில் பணியாற்றும் நபர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பெரும்பாலான தொழிலாளர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றும் நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக பல மணி நேரம் நின்று கொண்டே பணியாற்றும் போது தசை இழுப்பு, வலி மற்றும் கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இப்பிரச்சனைகளைத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது முதல் பிஸியோதெரிபி போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இவையெல்லாம் நிரந்தர தீர்வாக அமையாது. அதற்கு மாற்றாக வீட்டில் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தி கால் வலிக்குத் தீர்வு காண முடியும்.

மேலும் படிக்க: உடல் எடை குறைப்பு முதல் இருதய ஆரோக்கியம் வரை; நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

கால் வலிக்கான வீட்டு வைத்தியம்:

  • கால் வலிக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் உப்பை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு சிறிய கடாயில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்தெடுக்கவும்.
  • வறுத்த உப்பு மற்றும் மஞ்சள் கலவையை காட்டன் துணியில் போட்டு கால் பாதங்களிலும் மற்றும் கால்களில் வலி இருக்கும் இடங்களில் ஒத்தனம் வெக்கவும். கொஞ்சம் சூடான ஒத்தனம் வைக்கும் போது கால்களில் உள்ள நீர் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
  • சூடான வெப்பம் கால்களில் உள்ள இரத்த ஓட்டத்தைத் தூண்டி தசைகள் தளர்ச்சியடை செய்வதோடு, நீண்ட நேரம் நிற்பதால் ஏற்படும் கால் வலி, கால் வீக்கம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற இயற்கை எதிர்பு அழற்சி பண்புகள் கால்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

மேலும் படிக்க: உணவில் பருப்பு வகைகளைத் தவிர்க்கும் நபர்களாக நீங்கள்? அப்படின்னா இந்த பாதிப்புகளெல்லாம் நிச்சயம்!

எப்போது பயன்படுத்த வேண்டும்?

  • சூடான மஞ்சள் மற்றும் உப்பு ஒத்தனத்தைத் தினமும் தூங்கச் செல்லும் போது பயன்படுத்தலாம்.
  • ஒத்தனம் வைத்து முடித்தபின்னதாக காட்டன் துணியைத் தண்ணீரில் நனைத்து துடைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு நீவி விட்டால் போதும். தசைகள் தளர்ச்சியைக் குறைக்க உதவியாக இருக்கும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com