
மழைக்காலம் பலருக்கு பிடித்தமானதாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கு பல நோய்த் தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதனை தடுக்க அனைத்து பெற்றோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை இதில் காண்போம்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் மூக்கடைப்பு, சைனஸ் தொல்லையா? இதோ எளிய தீர்வுகளும், தடுப்பு முறைகளும்!
மழைக்காலத்தில் துரித உணவுகள் (Junk Foods) மற்றும் தெருவோர உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மழைக்காலத்தில் முடிந்தவரை வீட்டிலேயே சமைத்த சுகாதாரமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது நல்லது.
மீதமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். அது உடல்நல குறைபாடுகளை ஏற்படுத்தலாம். எப்போதும் புதியதாக சமைக்கப்பட்ட, சூடான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள். இது நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கும்.

குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் முன், அவற்றை நன்கு சுத்தமான நீரில் கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும். பழங்களின் தோலில் உள்ள கிருமிகள் குழந்தைகளின் வயிற்றுக்குள் செல்வதை தடுக்க இது உதவும்.
மேலும் படிக்க: Broccoli benefits in tamil: உங்கள் உணவில் ப்ரோக்கோலியை சேர்க்க வேண்டியதன் அவசியமும் அதன் நன்மைகளும்
மழைக்காலத்தில் தண்ணீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் பல நோய்கள் பரவக்கூடும். எனவே, உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பது மிகவும் நல்லது.

மழைக்காலத்தில் குழந்தைகள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் C நிறைந்த பழங்களை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்து, அவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com