herzindagi
image

மழைக்காலத்தில் உங்கள் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய 5 தாவரங்கள்

மழைக்காலத்தில் உங்கள் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய 5 தாவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். இவற்றை பராமரிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-11-23, 14:03 IST

மழைக்காலம் என்பது இயற்கையின் வளமான காலமாகும். இந்தக் காலத்தில் உங்கள் தோட்டம் செழிப்பாக வளரவும், புத்துணர்ச்சி பெறவும் சரியான தாவரங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். மழை நீர், மண் மற்றும் வானிலை ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி செழித்து வளரக் கூடிய ஐந்து சிறந்த தாவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துளசி:

 

இந்தியாவில் துளசி இலைகள் புனிதமானதாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் கருதப்படுகின்றன. மழைக்காலத்தில் இது மிகச் சிறப்பாக வளரும். துளசியின் மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இது காற்றை சுத்திகரித்து, கொசுக்களை விரட்டும் ஆற்றல் கொண்டது. அதன் குணப்படுத்தும் தன்மை, காற்று சுத்திகரிப்பு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை ஆகியவற்றால் மழைக்காலத்தில் தோட்டத்திற்கு இது ஒரு சரியான தாவரமாகும்.

Tulsi

 

மேலும் படிக்க: மாதுளை வளர்ப்பு: வீட்டிலேயே ஆரோக்கியமான பழங்களை அறுவடை செய்வது எப்படி?

 

செம்பருத்தி:

 

மழைக்காலத்தில் செம்பருத்திப் பூக்கள் துடிப்பான வண்ணங்களுடன் அழகாக மலர்ந்து, உங்கள் தோட்டத்திற்கு உற்சாகத்தை கூட்டுகின்றன. இதன் இலைகள் மற்றும் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சருமத்தை மென்மையாக்க உதவுகின்றன. செம்பருத்திப் பூக்கள், மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை (Pollinators) கவர்ந்து இழுக்கின்றன. செழிப்பான மலர்ச்சி மற்றும் ஆரோக்கிய பலன்களுடன், இது மழைக்கால தோட்டத்திற்கு ஒரு அற்புதமான தாவரமாகும்.

 

மல்லிகை:

 

மழைக்காலத்தில் மல்லிகை செடிகள் பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பதுடன், சுற்றுப்புறத்தில் இனிமையான நறுமணத்தை நிரப்புகின்றன. அதன் இனிமையான வாசனை மழைக்கால சூழலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இது மகரந்த சேர்க்கையாளர்களை ஈர்ப்பதுடன், உங்கள் தோட்டத்திற்கு ஒரு நேர்த்தியான அழகை கூட்டுகிறது. ஈரமான வானிலையில் அதிக நறுமணத்தை வழங்குவதால், மழைக்காலத்தில் வளர்க்க ஏற்ற ஒரு நறுமண தாவரமாக மல்லிகை விளங்குகிறது.

மேலும் படிக்க: Home garden tips: வீட்டிலேயே தோட்டம் அமைக்க விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

புதினா:

 

புதினா ஒரு நறுமணமூட்டும் மூலிகை. இது மழைக்காலத்தில் ஈரமான மண் மற்றும் ஓரளவு நிழலில் நன்கு செழித்து வளரும். இது வேகமாக வளரும் தன்மை கொண்டது மற்றும் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. உணவுகள் மற்றும் பானங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் சுவையை இது சேர்க்கிறது. இதை எளிதாக பராமரிக்கலாம் மற்றும் பல்வேறு ஆரோக்கிய பலன்களையும் கொண்டுள்ளது.

Mint

 

லெமன்கிராஸ்:

 

லெமன்கிராஸ், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலையில் நன்கு செழித்து வளரும். இது உயரமாக வளரக் கூடியது. மேலும், பூச்சிகளை விரட்டும் தன்மை இதில் உள்ளது. இவை மட்டுமின்றி தேநீர், சமையல் மற்றும் இயற்கை வைத்தியங்களுக்கு இது சிறந்தது. இதற்கு பராமரிப்பு மிகவும் குறைவு மற்றும் ஆரோக்கிய ரீதியாகவும் நன்மை அளிக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com