கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் தரும் பருவம் தான் மழைக்காலம். ஆனால், சளி, காய்ச்சல், நீரினால் பரவும் நோய்கள் போன்ற அபாயங்கள் மழைக்காலத்தில் அதிகரிக்கின்றன. இதற்கு ஏற்றார் போல் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு முறை அமைய வேண்டும். அதனை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இதில் காண்போம்.
மேலும் படிக்க: நாவல் பழத்தின் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய குறிப்புகள்
மழைக்காலத்தில் கிடைக்கும் பழங்களான பப்பாளி, பேரிக்காய் போன்றவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. பப்பாளியில் செரிமானத்திற்கு உதவும் மற்றும் வீக்கத்தை குறைக்கும் பப்பேன் (papain) என்ற நொதி உள்ளது.
தயிர், மோர் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் (fermented foods) போன்ற புரோபயாட்டிக்ஸ் (probiotics) நிறைந்த உணவுகள், மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்தவை. குடல் ஆரோக்கியம் என்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மழைக்காலத்தில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது.
செரிமானம் செய்ய எளிதான மற்றும் சூடான உணவுகளை தேர்ந்தெடுங்கள். குளிர்ந்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் மழைக்காலத்தில் அஜீரணத்தை ஏற்படுத்தும். சூப்கள், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கிச்சடி போன்ற உணவுகள் உங்களுக்கு இதமாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்த உதவுகின்றன.
துளசி, இஞ்சி, மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றில் அதிக அளவில் பூஞ்சை எதிர்ப்பு (anti-microbial) மற்றும் வீக்கத்தை குறைக்கும் (anti-inflammatory) பண்புகள் உள்ளன. மழைக்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த பெரிதும் உதவும்.
மேலும் படிக்க: இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் உணவுகள்
நீரினால் பரவும் நோய்களை தடுக்க, எப்போதும் வடிகட்டிய அல்லது கொதிக்க வைத்த நீரையே குடிக்கவும். சுத்திகரிக்கப்படாத நீரை தவிர்ப்பது அவசியம். நீரேற்றத்திற்காக மூலிகை தேநீர், இளநீர் மற்றும் சூடான சூப்கள் போன்றவையும் சிறந்த தேர்வுகளாகும்.
அதிக சர்க்கரை அல்லது அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து செரிமானத்தை பாதிக்கும். மழைக்காலத்தில், லேசான உணவுகள் மற்றும் பேரீச்சம்பழம், வெல்லம் போன்ற இயற்கையான சர்க்கரைகளை உட்கொள்வது நல்லது.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்தவை. வைட்டமின் சி சத்தை பெறுவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த தேர்வாகும்.
மழைக்காலத்தில் செரிமானம் ஆகும் திறன் சற்று குறைவாக இருக்கும். எனவே, அதிகப்படியான உணவுகள் மழைக்காலத்திற்கு ஏற்றதல்ல. உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவும் வகையில், சிறிய அளவிலான உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com