herzindagi
bread kulfi recipe making

Bread Kulfi Ice Cream: பிரெட்டிலும் குளு குளு குல்பி ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!

<span style="text-align: justify;">&nbsp;குல்பியில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கும் உதவியாக இருக்கும்</span>
Editorial
Updated:- 2024-03-15, 18:16 IST

கடைகளில் பலவிதமான ஐஸ்கிரீம்கள் விற்பனையானாலும் குழந்தைகளின் தேர்வு கட்டாயம் குல்பியாகத் தான் இருக்க முடியும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் இதயத்திலும் தனித்துவம் பிடித்துள்ள ஒரு குளு குளு ரெசிபி என்றால் குல்பிக்கு முதல் இடம் கொடுக்கலாம். பாதாம் குல்பி, கேசர் பிஸ்தா குல்பி, மாம்பழங்களைக் கொண்டு செய்யப்படும் மாம்பழ குல்பி என பல வகைகளில் சந்தைகளில் குல்பி ஐஸ்கிரீம் விற்பனை செய்வதைப் பார்த்திருப்போம். 

இந்த வரிசையில் குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் குல்பி ஐஸ்கிரீம் செய்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்  இருந்தால் கொஞ்சம் பிரெட் குல்பி ஐஸ்கிரீம்களை உங்களது வீடுகளில் ட்ரைப் பண்ணிப்பாருங்கள். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே உங்களுக்காக..

bread kulfi

மேலும் படிக்க: அடிக்கிற வெயிலுக்கு குளு குளு மாம்பழ ஐஸ்கிரீம்!

பிரெட் குல்பி ஐஸ்கிரீம்:

தேவையான பொருட்கள்

  • பிரெட்- தேவைக்கு ஏற்ப
  • பால் - அரைலிட்டர்
  • குங்குமப்பூ- சிறிதளவு
  • பாதாம் - 10
  • ஏலக்காய் - சிறிதளவு
  • பிஸ்தா- 5
  •  முந்திரி - 10
  • சர்க்கரை - 1 கப்

 செய்முறை:

  • பிரெட் குல்பி ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில், அரை லிட்டர் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாலை நன்றாக காய்ச்சிய பின்னதாக, பிரெட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதில் பிய்த்துப் போட வேண்டும்.
  • இதையடுத்து ஊற வைத்த பிஸ்தா மற்றும் பாதமைத் தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதே போன்று முந்திரி மற்றும் ஏலக்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கிக் காய்ச்சி வைத்துள்ள பாலுடன் சேர்த்து கொஞ்சம் நேரம் கொதிக்க விட்டவும். 
  • பின்னர் காய்ச்சி வைத்த குல்பி கலவை சூடு ஆறியதும் குல்பி செய்யக்கூடிய குடுவை அல்லது சிறிய சிறிய டம்ளர்களில் ஊற்றி ப்ரிட்ஜில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வைத்து எடுத்தால் போதும். சுவையான ப்ரெட் குல்பி ஐஸ்கிரீம் ரெடி.
  • பிரெட்டின் சுவையும், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ்களின் சுவையும் ஒருசேர கலந்து வரும் போது நமக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். இதோடு அடிக்கிற இந்த வெயிலுக்கு இதமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த பிரெட் குல்பி ஐஸ்கிரீம்களை செய்துக் கொடுக்க மறந்துவிடாதீர்கள். 

மேலும் படிக்க: : சுவையான பட்டர் சிக்கன் கதி ரோல் செய்வது எப்படி? 

பிரெட் குல்பியின் நன்மைகள்:  

instant kulfi

குல்பியை அதிகமாக சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சளி பிடித்துவிடும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க தயக்கம் காட்டுவார்கள். குளிர்காலங்களில் கூட இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளலாம். வெயில் காலத்தில் தயக்கம் வேண்டாம். குறிப்பாக இதில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கும் உதவியாக இருக்கும். ஆனாலும் அளவுக்கு மீறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com