திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியுடன் ஏற்படுத்தக்கூடிய தருணம். 32 வயதாகிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை என புலம்புவர்கள் திருமணம் ஆனவுடன் ஏன்டா கல்யாணம் செய்தோம் என வருத்தப்படுவார்கள். இவற்றிற்கெல்லாம் முறையான புரிதல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது தான் முக்கியமான காரணமாக அமைகிறது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே எவ்வித சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழ்க்கையை வழிநடத்தி செல்ல வேண்டும்? என்பது குறித்த சில வழிமுறைகள் உங்களுக்காக.
மேலும் படிக்க: காதல் திருமணம் செய்துகொள்வதால் தம்பதிகளுக்குள் கிடைக்கும் பல விதமான நன்மைகள்
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டாலே ஆண் மற்றும் பெண் இருவரும் மொபைல் எண்களைப் பெற்றுக் கொண்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். அதுவே திருமணமாகி சில மாதங்களிலேயே பேசும் நேரம் குறைந்துவிடும். உன்னுடன் தானே இருக்கிறேன்? ஏன் அடிக்கடி பேசித் தொல்லை செய்கிறாய்? என்பது போன்ற வார்த்தைகள் முதல் சண்டைக்குக் காரணமாக அமைகிறது. திருமணத்திற்கு முன்னதாக பேசியதைப் போன்று மணிக்கணக்கில் பேச வேண்டும். மாறாக கொஞ்சம் பாசமுடன், சாப்பிட்டாச்சா? இன்று அலுவலகத்தில் என்ன நடந்தது? என்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி மனம் விட்டு பேசுங்கள். இப்படி பேச ஆரம்பிக்கும் போது எவ்வித விஷயங்களையும் மறைப்பதற்கு வாய்ப்பில்லை.
மேலும் படிக்க: விவாகரத்து முடிவை எடுக்கும் முன்பாக கருத்தில் கொள்ள வேண்டிய ஆறு விஷயங்கள்
நாள் முழுவதும் வீட்டு வேலை முடித்துவிட்டு சோர்வாக இருக்கும் மனைவிகளுக்குக் கணவன்மார்கள் கொஞ்சம் உதவிகள் செய்யலாம். அவர்களுக்கு காபி அல்லது டீ போட்டு குடிப்பது போன்ற சின்ன சின்ன வேலைகள் அவர்களை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும். ஒருவேளை உங்களால் வேலை செய்ய முடியவில்லையென்றால் அவர்களின் உணர்வுகளை மதித்து பேச ஆரம்பிக்கவும்.
குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக வேலைப் பார்ப்பது கட்டாயம். அதற்காக வேலையை மட்டும் பார்த்துவிட்டு திருமண வாழ்க்கையை பாழாக்கிவிடக்கூடாது. எனவே கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் கொஞ்சம் உங்களது வாழ்க்கைத் துணையோடு நேரம் ஒதுக்குங்கள். வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது ஏதாவது பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிடுங்கள்.
மேலும் படிக்க: திருமண வாழ்க்கையில் பிரச்சனையா? அப்போ இந்த 6 டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்!
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் மாறி மாறி பேசிக்கொள்வோம். கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருக்கும். முதலில் நிதானமாக இருக்க வேண்டும். எது நியாயமானது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். உங்களது துணையின் கருத்தை முதலில் கேளுங்கள். கோபப்படவோ அல்லது வருத்தப்படவோ கூடாது. இதை செய்தாலே பாதி சண்டைகள் குடும்பத்தில் குறையக்கூடும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com