herzindagi
kushi movie review tamil

Kushi Movie Tamil Review : 'கட்டாயம் ப்ளாக்பஸ்டர்'..! குஷி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ..

&nbsp;நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருக்கும் குஷி திரைப்படம் எப்படி இருக்கிறது என பதிவில் பார்க்கலாம்.. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-09-01, 13:54 IST

நடிகை சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.இப்படத்திலிருந்து ’நா ரோஜா நுவ்வே’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் சமந்தா - விஜய் தேவரகொண்டா முதன் முறையாக ஜோடி சேர்கின்றனர். படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் தான், சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.அதன் பின்பு தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமான சமந்தா படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். 

 குஷி படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.அதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடனமாடி ரசிகர்களை உற்சாக படுத்தினார்கள். இசை நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த பதிவும் உதவலாம் : காட்டன் சேலை.. தலையில் அரளிப்பூ! நடிகை ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்..

kushi insert

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஷி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் ரிவ்யூ குறித்து ட்விட்டரில் பலர் பதிவிட்டுள்ளனர். அதில்’ முதல் பாதி சூப்பர்.இரண்டாம் பாதி வேற லெவல்.விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருக்கின்றர்.அற்புதமான கதை.படத்தின் ஒளிப்பதிவு அருமை’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொருவர் ‘விஜய் தேவரகொண்டாவுக்கு இது ஒரு கம்பேக் படமாக அமையும். விஜய் தேவரகொண்டா-சமந்தாவின் கெமிஸ்ட்ரி  நன்றாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்தின் இண்டர்வெல் மற்றும் ப்ரீ கிளைமேக்ஸ் பாராட்ட வேண்டும். இந்த படம் கட்டாயம் ப்ளாக்பஸ்டர் தான்’ என பதிவிட்டுள்ளார்.  மேலும் படத்தின் இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வகாபிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com