
ஸ்ரீதேவி -போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து குஞ்சன் சக்சேன என்ற பயோபிக் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றது. 2021 ஆம் ஆண்டு வெளியான ரூஹி என்ற ஹாரர் திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த ஹாரர் படமாக அமைந்தது.
அதையடுத்து கோலாமாவு கோகிலா படத்தின் ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்திலும், மலையாள படமான ஹெலன் படத்தின் ரீமேக்கன் ‘மில்லி’ என்ற படத்திலும் நடித்தார். தற்போது என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா படத்தில் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.மேலும் தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஜான்வி கபூர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். தற்போது லேட்டஸ்டாக பிங்க் கலர் புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : கடற்கரையில் நடிகை பூனம் பஜ்வாவின் கவர்ச்சி படங்கள்!

இந்த புகைப்படத்தில் சிம்பிளான பிங்க் கலர் புடவையை ஜாக்கெட் அணியாமல் வித்தியாசமான ஸ்டைலில் கட்டி போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த லுக்கிற்கு ஏற்றமாதிரி ஹேர் ஸ்டைல் செய்து அரளிப்பூவை தலையில் வைத்திருக்கிறார். ஜான்வி கபூரின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com