thalapathy vijay home chennai

Vijay Home Tour : கார் பார்க்கிங் தொடங்கி கார்டன் வரை.. நடிகர் விஜய் வீட்டில் இத்தனை வசதிகளா!

சென்னை நீலாங்கரையில் இருக்கும் நடிகர் விஜய் வீட்டின் ஹோம் டூர் பதிவு. வீட்டில்  இருக்கும் முக்கியமான வசதிகள் தொடங்கி பிரம்மாண்டமாக தெரியும் வீட்டின் அழகை குறித்தும் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-04-19, 11:04 IST

தளபதி விஜய் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது சென்னை நீலாங்கரையில் இருக்கும் சொகுசு பங்களாவில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு அருகாமையில் கோலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகளும் உள்ளன. விஜய்யின் தீவிரமான ரசிகர்கள் அடிக்கடி நீலாங்கரைக்கு சென்று விஜய்யின் வீட்டுக்கு முன்பு தவம் கிடப்பார்கள்.

எப்படியாவது விஜய்யை நேரில் பார்த்து விட மாட்டடோமா? அவருடன் ஒரு செல்பி எடுக்க முடியுமா? என ஆசையில் வாசலில் மணிக்கணக்கில் நிற்பார்கள். சிலருக்கு விஜய்யை தற்செயலாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பலருக்கும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:இன்ஸ்டாவில் இணைந்த நடிகர் விஜய்! ரசிகர்கள் செம்ம ஹேப்பி

விஜய்யின் சொகுசு பங்களா

நீலாங்கரையில் இருக்கும் விஜய்யின் வீடு பிரம்மாண்டத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து தனது வீட்டை வடிவமைத்து கட்டி இருக்கிறார் நடிகர் விஜய். சினிமா ஷூட்டிங் காரணமாக விஜய் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார். அப்போது ஒருமுறை ஹாலிவுட் பிரபலம் டாம் குரூஸின் புகழ்பெற்ற கடற்கரை மாளிகையை பார்க்க விஜய்க்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

அந்த வீட்டை பார்த்து பிரமித்து போன விஜய், அதே போன்ற வீட்டை தனது ஆசைக்கு ஏற்றார் போல் பல கோடி செலவில் நீலாங்கரையில் கட்டியதாக கூறப்படுகிறது. டாம் குரூஸ் வீட்டின் சாயல், விஜய்யின் வீட்டிலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் அவரின் வீட்டினுள் மிகப் பெரிய தோட்டம், எந்த பக்கம் திரும்பினாலும் பச்சை புல்வெளிகள், வித்தியாசமான செடிகள்,மரங்கள் ஆகியவை நிறைந்து இருக்குமாம்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடங்கி உரம் தெளிப்பது வரை அனைத்தையும் விஜய்யே ஆர்வம் எடுத்து கவனித்து கொள்வாராம்.

vijay home tour

சென்னை நீலாங்கரையில் உள்ள கேசுவரினா டிரைவ் தெருவில் விஜய்யின் வீடு அமைந்துள்ளது. இந்த பகுதியின் அடையாளமாகவே மாறி விட்டது நடிகர் விஜய்யின் வீடு. கோபுரம் போல உயர்ந்த கதவு. சுற்றிலும் சிசிடிவி கேமரா, ஃபோன் கால் வசதி, லைவ் சாட் என அனைத்தும் வசதிகளும் நுழவு வாயிலில் இருக்கும். அனுமதி இல்லாமல் ஒருவர் கூட உள்ளே நுழைய முடியாது. அதே போல் கதவுக்கு சீக்ரெட் கோட் பின் நம்பரும் உண்டு.

நடிகர் விஜய்யின் வீடு பெரும்பாலும் நவீன கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. வீட்டின் மொத்த கட்டமைப்பும் கெஸெபோ அமைப்பில் காட்சியளிக்கிறது. வேலை பணியாட்கள் உள்ளே செல்ல, வெளியே வர தனி வழி, ஒரே நேரத்தில் 4க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் ஏரியா. நடிகர் விஜய்யிடம் 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், 1.30 கோடி மதிப்புள்ள ஆடி கார், 75 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சீரிஸ், 90 லட்சம் மதிப்புள்ள 35 பிஎம்டபிள்யூ எக்ஸ், மினி கூப்பர் கார்கள் ஆகியவை உள்ளன.

actor vijay home

மகன் மற்றும் மகளின் பாதுகாப்புக்கும் விஜய் ஏகப்பட்ட வசதிகளை செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ரூம்களுக்கு டிஜிட்டல் கதவுகள், பிளே ஏரியா, ஹோம் தியேட்டர், ஸ்போர்ட்ஸ் ஏரியா என நடிகர் விஜய் வீட்டின் உட்புறம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:தமிழ் பிரபலங்களின் காணக்கிடைக்காத பழைய புகைப்படங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

mages Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com