image

Rajinikanth Birthday Wishes: பிரதமர் முதல் கடைக்கோடி ரசிகர்களின் இணைய வாழ்த்து மழையில் நனையும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் 75 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், கடைக்கோடி ரசிகர்கள் என அனைவரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவின் வாயிலாக பகிர்ந்துவருகின்றனர்.
Editorial
Updated:- 2025-12-12, 15:01 IST

சூப்பர் ஸ்டார் என்ற சிறு குழந்தைகள் கூட ரஜினி்காந்த் என்று சொல்லும் அளவிற்கு தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். முள்ளும் மலரும் தொடங்கி 50 ஆண்டுகளாக திரையுலகில் சாதனைப் படைத்துவரும் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் பலரும் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பல தலைமுறைக் கடந்த நடிகர் ரஜினி- மோடி புகழாரம்

ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ் மொழியின் தன்னுடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்துளள்ளார் நரேந்திர மோடி. அந்த வாழ்த்து செய்தியில், 75 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது. அவரது திரையுலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பரணியில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என தனது வாழ்த்து செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

வயதை வென்ற வசீகரம் - மு.க ஸ்டாலின் வாழ்த்து


ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ரஜினிகாந்த் என்றால் வயதை வென்ற வசீகரம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மேடையில் ஏறினாலே அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை என்றும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்ட மாமனிதர் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

 

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கிய ரஜினிகாந்திற்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். இவர்களைப் போன்று பாஜக அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

View this post on Instagram

A post shared by Superstar Rajinikanth Fans (@superstarrajinikanthfans)

 

 

 

 

 

View this post on Instagram

A post shared by Superstar Rajinikanth Fans (@superstarrajinikanthfans)

தலைவா வயதானாலும் உன்னுடைய ஸ்டைல் எப்போதும் உன்னைவிட்டு போகாது என்றும், எத்தனை புதுபுது நடிகர்கள் வந்தாலும் நீங்கள் தான் என்னுடைய உயிர், எப்போதும் நீங்கள் தான் மாஸ், படையப்பா எப்போதும் சரவெடி தான் என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோடு மட்டுமின்றி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் இன்றைக்கு தங்களது வாட்ஸ் அப் ஸ்டேடசிலும் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Image source - Instagram

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com