
பிரபலங்கள் பலரும் அடிக்கடி குழந்தைப்பருவ புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்வார்கள்.பிரபல நடிகைகளின் குழந்தைப்பருவ புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க..
நேஷ்னல் க்ரஷ் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார் ராஷ்மிகா.இவர் பள்ளிக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட குழந்தைப்பருவ புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் ராஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
நடிகை ஹன்சிகா சோஹேல் என்பவரை இந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது. ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ’ஷக்க லக்க பூம் பூம்’ என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இந்த சீரியல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருந்தது.
இந்த பதிவும் உதவலாம் : ரன்பீர் - ராஷ்மிகாவின் ட்ரெண்டிங் செல்ஃபி!

நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து படிப்படியாக குணமடைந்து வருகிறார். சமந்தா இந்த குழந்தைப்பருவ புகைப்படத்தில் பிங்க் நிற கவுண் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா பிரபல நடிகையாவார். இவர் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதை ரீகிரியேட் செய்ய விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

