சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் X திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என வசனம் இடம்பெற்றிருக்கும். அப்போது திரையரங்கிற்குள் இருந்த ரசிகர்கள் கரகோஷமிட்ட பெயர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 1975 முன்பாகத் தமிழ் சினிமாவில் வெள்ளை நிறத் தோல் நடிகர்கள் மட்டுமே கோலோச்சி கொண்டிருந்தனர்.
இதைத் தவிடுபொடியாக்கும் வகையில் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார் சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்த். முதலில் வில்லன் அடுத்து குணச்சித்திர நடிகர் அதன் பிறகு கதாநாயகன், ஸ்டார், ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார், தலைவர் எனத் தனது திரையுலக பயணத்தில் கடின உழைப்பால் ரஜினிகாந்த் முன்னேறிக் கொண்டே இருந்தார் என்றால் அது மிகையல்ல.
குணச்சித்திர நடிகரிலிருந்து கதாநாயகனாக ரஜினிகாந்த் பரிமாணமான போது தனக்கென ஸ்டைல் உருவாக்கி அதை ரசிகர்கள் மனதில் நன்கு பதிய வைத்தார். நம்மைப் போல இருக்கும் ஒருவன் திரையில் தோன்றுகிறானே என எண்ணம் பலரிடத்திலும் தோன்றி ரஜினிகாந்தின் ரசிகர் பட்டாளம் நீடித்துக் கொண்டே சென்றது.
ஆகச் சிறந்த நடிகனாக உருவெடுக்க எவையெல்லாம் தேவையோ அதனுடன் சேர்த்து தனது ஸ்டைலையும் புகுத்தினார் ரஜினிகாந்த். பட்டி தொட்டி எங்கும் ரஜினிகாந்தின் ஸ்டைல் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. முள்ளும் மலரும், ஆறில் இருந்து அறுவது வரை என கிளாஸ் படங்களைக் கொடுத்த ரஜினிகாந்த் அதன் பிறகு தனது ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்பதை நன்கு அறிந்து அதற்கு ஏற்றார் போல் படங்களில் நடித்தார்.
மேலும் படிங்க ஆக்ஷன் அதிரடி நிறைந்த “டாக்ஸிக்” ! டைட்டில் அறிவிப்பில் இதை கவனித்தீர்களா ?
யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆன்மிகவாதியாக ராகவேந்திரா படத்தில் நடித்தார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பலரும் ரஜினிகாந்த்தை ராகவேந்திரராகவே பாவித்தனர். 1990 பிறகு ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் மன்னனாக வலம் வந்தார். தளபதி, மன்னன், அண்ணாமலை, முத்து, பாட்ஷா, படையப்பா என மாபெரும் வெற்றி படங்களைக் கொடுத்து ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய வசூல் சாதனைகளைப் படைத்தார். இதில் முத்து திரைப்படம் கடல் கடந்து ஜப்பானிலும் வசூலை குவித்தது.
பல இளம் நடிகர்களின் ரோல் மாடலாக உருவானார் ரஜினிகாந்த். திரையுலகிற்கு புதிதாக வரும் இயக்குநர்களும் ரஜினிகாந்த்தை வியந்து பார்த்தே சினிமாவுக்கு வந்தேன் அவரை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என மிகழ்ச்சியோடு கூறுவதுண்டு. அஜித், விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும் அவர்களும் தங்களது தொடக்க காலத்தில் ரஜினிகாந்த் ரெஃபரென்ஸ் காட்சிகளை வைத்திருக்கின்றனர்.
மேலும் படிங்க பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி
48 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை உச்சங்கள் தொட வைத்து முறியடிக்க முடியாத எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கிறார். இந்தாண்டும் கூட ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமே அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக உள்ளது. அடுத்ததாக ஜெய் பீம் ஞானவேலுடன், கைதி லோகேஷ் கனகராஜூடனும் இணைகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த இரு படங்களையும் எதிர்நோக்கி ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
73ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்திற்கு ஹெர் ஜிந்தகி குழு சார்பாக வாழ்த்துகள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com