பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி

காமெடி நடிகர் ரெடிங் கிங்ஸ்லி கடந்த 10ஆம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

Redin Kinsley marries serial actress sangeetha
Redin Kinsley marries serial actress sangeetha

கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் டைமிங் காமெடி அடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த 10ஆம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து எந்தவொரு முன்னறிவிப்பும், தகவலும் கசியாத நிலையில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மிகக் குறைவான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ரெடின் கிங்ஸ்லி - சங்கீதாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணக் கோலத்தில் இருவரும் ஜொலிக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மைசூருவில் உள்ள கோயிலில் எளிய முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

redin kingsley marriage

தமிழ் சீரியல்கள் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 2021ல் லோலேஷ் கனகராஜ் இயக்கியிருந்த மாஸ்டர் படத்தை உதாரணமாகக் கூறலாம்.

மேலும் படிங்கவசமாக சிக்கிய போஸ் வெங்கட் ! வச்சு செய்த அஜித் ரசிகர்கள்

25க்கும் மேற்பட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தாலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பணியாற்றிய படங்களில் மட்டுமே இவரது டைமிங் காமெடி, நகைச்சுவை உணர்வு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி படங்களிலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் நயன்தாராவின் 75ஆவது திரைப்படமான அன்னபூரணியில் ஜெய்யின் நண்பராக நடித்திருந்தார். தற்போது சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP