
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகிவுள்ள ஜவான் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அட்லீ தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது.அதையடுத்து விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். நடிகர் விஜய்யுடன் இணைந்து அடுத்தடுத்து ஹாட்ரிக் படங்களை கொடுத்த ஒரே இயக்குனர் அட்லீ தான். இவரின் பலமே ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் அனைத்து எமோஷன்களையும் வைத்து மொத்த பாக்கேஜாக படத்தை உருவாக்குகிறார்.
தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’என்ற படத்தில் இயக்கிவுள்ளார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கிறது. இந்த நடிகை நயன்தாரா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .இதில் விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு, சன்யா மல்கோத்ரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்த பதிவும் உதவலாம் : 'ஜவான்’ படம் ரிலீஸை முன்னிட்டு திருப்பதியில் தரிசனம் செய்த ஷாருக்கான்..

ஜவான் படத்தின் ரீலிஸை முன்னிட்டு நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இவர்களுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் சென்று தரிசனம் செய்தனர்.அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சமூக நீதிக்காக போராடும் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்திருக்கிறாராம். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒருவர் ’இது படம் அல்ல.இந்தி திரையுலகில் நீண்ட நாட்களாக கொண்டாடப்படும் மாஸ் சினிமா. நடிகர் ஷாருக்கானை எந்த இயக்குனராலும் காட்ட முடியாத கதாபாத்திரத்தில் அட்லீ காட்டியுள்ளார்.ஆக்ஷன், டயலாக், நடிப்பு மற்றும் சமூக கருத்துக்கள் இப்படி அனைத்தும் கலந்த படமாக ஜவான் அமைந்திருக்கிறது. இந்த படத்தை கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஜவானின் ஷாருக்கானின் இண்ட்ரோ சீனை பாராட்டி ஒருவர் பதிவிட்டுள்ளார். ‘இந்த வருடத்தில் இது போன்ற எந்த ஹீரோவுக்கும் இண்ட்ரோ சீன் பார்த்ததில்லை.ஜவான் தான் பெஸ்ட்..என்னா ஸ்கிரீன் பிரசன்ஸ்’ என்று பதிவிட்டிருக்கிறார். அனிருத்தின் இசைக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி எப்போதும் போல மாஸ் காட்டியிருக்கின்றனராம்.
இந்த திரைப்படம் கட்டாயம் ஷாருக்கானின் டாப் 5 ஃபேவரெட் படங்களில் ஒன்றாக இடம் பிடிக்கும் என்று கூறப்படுக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலிக்கும் என்று கூறப்படுக்கிறது.மொத்தத்தில் ஜவான் திரைப்படம் ‘பிளாக்பஸ்டர் ஹிட்’.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com