
சமையலறையில் அன்றாட பணிகளில், வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வருவது இயல்பான விஷயமாக இருக்கிறது. வெங்காயத்தை நறுக்கும் போது ஏற்படும் கண் எரிச்சலுக்கும், கண்ணீர் வருவதற்கும் காரணம், அதில் உள்ள சல்ஃபர் தான். இந்த சேர்மங்கள் காற்றில் வெளியேறி, நம் கண்களில் உள்ள ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும் போது, அவை லேசான அமிலங்களை உருவாக்கி, கண்களில் அசௌகரியத்தையும், கண்ணீரையும் தூண்டுகின்றன.
எனினும், இதனை குறைப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றை பின்பற்றுவதன் மூலம் வெங்காயம் நறுக்கும் போது ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண்ணீரை ஓரளவிற்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.

வெங்காயத்தின் மேல் அடுக்கை நீக்கவும்: வெங்காயத்தின் வெளிப்பகுதியில் உள்ள தோலை உரித்து நீக்குவது, சல்ஃபரின் அளவைக் குறைத்து, கண் எரிச்சல் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
மேலும் படிக்க: ஆற்றல் முதல் இளமை தோற்றம் வரை: முளைகட்டிய பாசிப்பயிறின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
குளிர்ந்த நீரில் ஊறவைத்தல்: வெங்காயத்தை உரித்த பிறகு, குளிர்ந்த நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்கலாம். இது சல்ஃபர் சேர்மங்களின் வீரியத்தைக் குறைக்கும்.
வெங்காயம் வெட்டுவதற்கு முன் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்: வெங்காயத்தை வெட்டுவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்பு அதனை ஒரு பாத்திரத்தில் மூடி ஃபிரிட்ஜில் வைக்கலாம். இது வெங்காயத்தை வெட்டும் போது வெளியேறும் கண்ணீரை தடுக்க உதவும். குளிர்ந்த நிலையில் சல்ஃபர் வாயுக்கள் குறைவாக வெளியாகும்.
மேலும் படிக்க: வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்ற கவலை வேண்டாம்; கொத்தமல்லியை ஒரு வாரம் வரை சேமித்து வைக்கும் எளிய வழிகள்
வெங்காயத்தை வெட்டிய பின் நீரில் வைக்கவும்: நறுக்கப்பட்ட வெங்காய துண்டுகளை நீரில் போடுவது, அதன் வாசனையையும், சல்ஃபர் சேர்மங்களின் தீவிரத்தையும் குறைக்கும்.

மின்விசிறி முன் அமர்ந்து வெங்காயத்தை நறுக்கவும்: மின்விசிறிக்கு அருகில் நின்று வெங்காயம் நறுக்குவது, சல்ஃபர் சேர்மங்களை உங்கள் கண்களில் இருந்து விலக்கி, காற்றில் பரப்ப உதவும்.
இது தவிர கண் எரிச்சல் ஏற்பட்டால், சுத்தமான தண்ணீரால் உடனடியாக கண்களை கழுவலாம். மேலும், கூடுமானவரை ஃப்ரெஷ்ஷான வெங்காயத்தை பயன்படுத்துவது அசௌகரியத்தை குறைக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com