
இயக்குனர் அட்லீ ஆர்யா, நயன் தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அட்லீக்கு ஏராளமான பெயரையு, புகழையும் பெற்று தந்தது. அது மட்டுமில்லாமல் இந்த படம் 100 நாட்களுக்குன் மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது. இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கினார். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மீண்டும் விஜய்யுடன் இணைந்து மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தார்.
தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’என்ற படத்தில் இயக்கிவுள்ளார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கிறது. இந்த நடிகை நயன்தாரா போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .இதில் விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு, சன்யா மல்கோத்ரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த பதிவும் உதவலாம் : கெத்து லுக்கில் நடிகை பிரணித்தா! வைரல் போட்டோ ஷூட்..
இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இவர்களுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் சென்று தரிசனம் செய்துள்ளனர். திருப்பதியில் ஷாருக்கான் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com