விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் கதாநாயகியாக ரவீணா தாஹா நடித்து சீரியல் பிரியர்கள் மத்தியில் பிரபலமானார். ரவீணா சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவில் படங்கள் நடித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்தில் ரவீணா தாஹா நடித்திருந்தார்.நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியாகவுள்ள பீட்சா 3 படத்திலும் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியின் நம்பர் 1 நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார். நடிகை ரவீணா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
நடிகை ரவீணா சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். இதில் பட இடங்களுக்கு வெக்கேஷன் சென்று விலாக் வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.இந்த வீடியோக்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.மேலும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7-ல் ரவீணா தாஹா போட்டியாளராக கலந்துக்கொள்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
இந்த பதிவும் உதவலாம் : சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் கியூட் செல்ஃபீஸ்!
நடிகை ரவீணா தாஹா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்வார். தற்போது லேட்டஸ்டாக கருப்பு நிற மாடர்ன் உடையில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் பார்க்க கியூட்டாக இருக்கிறார். ரவீணாவின் இந்த படங்கள் வைரலாகி வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com