நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானார்.அந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.அதையடுத்து சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மீனாட்சியாக நடித்து வந்தார். சின்னத்திரை பிரபலம் ரியோவுடன் இணைந்து சரவணன் மீனாட்சி சீசன் மூன்றிலும் மீனாட்சியாக நடித்தார். இந்த சீரியல் 2016 ஆம் முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.
சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை.
விஜய் டிவியில் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 -இல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ரச்சிதா 91 வது நாள் எலிமினேட் ஆனார்.அதன் பின்பு பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் ஓ சொல்றியா ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
இந்த பதிவும் உதவலாம் : இனியா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸை பகிர்ந்த ஆல்யா மானசா!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். லேட்டஸ்டாக விதவிதமாக செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.இந்த புகைப்படத்தில் நோ மேக்கப் லுக்கில் ரசிக்க வைத்திருக்கிறார்.ரச்சிதாவின் இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com