சினிமா பிரபலங்களுக்கும் கிசு கிசுகளுக்கும் பஞ்சமே இல்லை. யார் யாரை காதலிக்கிறார்? யாரை திருமணம் செய்யப்போகிறார்? என அவரவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக நடிகர் விஷால் குறித்து எத்தனையோ? விமர்சனங்கள் வந்திருந்தாலும், அதை எதையும் பொருட்படுத்தவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் போது தான் தன்னுடைய கல்யாணம் என்று கூறிவந்த நிலையில், ஆகஸ்ட் 29 ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக கூறியிருந்தார்.
தமிழ் திரையிலகினர் மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும் விஷாலுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தான் சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஷாலுக்கு நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவீட்டார்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.
என்னுடைய பிறந்த நாளில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களும் நன்றி என்றும், இந்நாளில் மிகவும் எளிமையாக சாய் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது என்ற தகவலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக நடிகர் விஷால் பகிர்ந்துள்ளார். சாய் தன்ஷிகா மற்றும் விஷால் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படங்கள் உள்பட நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்து இணைய தள வாசிகள் பலரும் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
Thank u all u darlings from every nook and corner of this universe for wishing and blessing me on my special birthday. Happy to share the good news of my #engagement that happend today with @SaiDhanshika amidst our families.feeling positive and blessed. Seeking your blessings and… pic.twitter.com/N417OT11Um
— Vishal (@VishalKOfficial) August 29, 2025
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சாய் தன்ஷிகாவைக் காதலிப்பதாக அறிவித்திருந்தார். ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் எப்போது கட்டி முடிக்கப்படும் அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இன்னும் பணிகள் முடிவடையாத நிலையில் , தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ல் திருமணம் இல்லை என்றும், வேறொரு நல்ல செய்தி சொல்கிறேன் என தெரிவித்தார். அதன் படி இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
48 வயது ஆகிவிட்டது எப்போது திருமணம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக நடிகர் விஷாலுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் மகுடம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation