சின்னத்திரையில் முன்னணி பிரபலமாக வலம் வரும் ஆல்யா மானசா மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த சீரியலில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா சந்தியாவாக நடித்து வந்தார். இரண்டாவது முறை கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சின்னத்திரை நட்சத்திரங்களில் பலர் தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளனர். அதே போல் சஞ்சீவ் , ஆல்யா மானசாவும் யூடியூப் சேனல் வைத்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைத்த ஆல்யா சன் டிவியில் இனியா சீரியல் மூலம் கம் பேக் கொடுத்தார். இந்த சீரியலில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக ரிஷி நடிக்கிறார். இந்த சீரியல் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது.நடிகை ஆல்யா மான்சா இன்ஸ்டாகிராமில் பல பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்து வருகிறார்.ஆல்யா மானசா லேட்டஸ்டாக பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது
இந்த பதிவும் உதவலாம் : ஷெர்ரி நிற உடையில் ரசிக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி!
ஆல்யா மானசா இனியா சீரியலில் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் பச்சை நிற புடவையில் ரசிக்க வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com