திரை பிரபலங்களை எப்போது பார்த்தாலும், அவர்களுடைய முகம் பொலிவாக இருப்பதை போன்று காட்சி அளிக்கும். இதற்காக, அவர்கள் தீவிர பயிற்சிகள் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பது நிதர்சனம் தான். எனினும், இவற்றில் சிலவற்றை சாமானிய மக்களும் பின்பற்ற முடியும். அந்த வகையில், தனது சரும பராமரிப்பு முறை மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அவரை சமூக வலைதளங்களில் பின் தொடரும் அனைவருக்கும், சமந்தா எந்த அளவிற்கு ஸ்கின் கேர் மற்றும் ஃபிட்னெஸ்-ல் கவனம் செலுத்துகிறார் என்று தெரியும். இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நடிகை சமந்தா நேர்காணல் அளித்தார். அதில், தன்னுடைய சரும பராமரிப்பு முறை குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தூக்கம் இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்தால் சிறந்த தூக்கத்திற்கு தினமும் சங்குப்பூ டீயை குடிக்கவும்
குறைவான பொருட்கள் போதுமானது:
அந்த வகையில், சரும பராமரிப்புக்காக குறைவான அளவு பொருட்களை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும் என்று சமந்தா கூறியுள்ளார். எனினும், இதற்கு முன்னர் சரும பராமரிப்புக்காக பல ஸ்டெப்ஸை ஃபாலோ செய்த நிலையில், தற்போது அவற்றை பெருமளவு குறைத்துக் கொண்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். அதன்படி, தனது சருமத்திற்கு ஏற்ற பொருட்களை மட்டும் கண்டறிந்து பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
காலநிலைக்கு ஏற்ப மக்களின் சரும பராமரிப்பு முறைகள் மாற்றம் அடைந்து வருவது இயல்பு தான். ஆனால், எப்போதும் பலன் அளிக்கும் பொருட்களை சரியாக ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்று இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதனடிப்படையில், ரெட்டினால்-ஐ (Retinol) தன்னுடைய சரும பராமரிப்பில் பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார். எனினும், இளம் பருவத்தினருக்கு இது தேவை இல்லை என்று அவர் அறிவுறுத்துகிறார். இவை மட்டுமின்றி சன்ஸ்கிரீன் (Sunscreen) மற்றும் ஒரு நல்ல சீரம் (Serum) ஆகியவற்றை மட்டுமே, தான் பயன்படுத்துவதாக சமந்தார் குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க: தீரா தொல்லையாக இருக்கும் தலைவலி பிரச்சனையை தீர்க்க உதவும் உணவுகள்
சமந்தா மேற்கொள்ளும் உடற்பயிற்சி:
சரும பராமரிப்பு மட்டுமே ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான அர்த்தம் கிடையாது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது. அதன்படி, தன்னுடைய உடற்பயிற்சிகள் குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். இதற்காக பளுதூக்கும் பயிற்சி, பிலேட்ஸ் (Pilates) மற்றும் யோகா ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றுவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation