-1761207518736.webp)
உறவுகளையும் சண்டை, சச்சரவுகளையும் எப்போதும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்து இருக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. சண்டைகள் இல்லையென்றால் வாழ்க்கை சுவாரஸ்சியமாக இருக்காது என்பார்கள். அதற்காக நாள் முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் எந்த வேலையையும் முறையாக செய்ய முடியாது. மன அழுத்தம் தான் நமக்கு மிச்சம். அதிலும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தினமும் ஏதேனும் பிரச்சனைகள் என்றால் அந்த மன அழுத்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்துடன் உறவை அமைய என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்த சில தகவல்கள் உங்களுக்காக.
எந்தவொரு உறவாக இருந்தாலும் முறையான தகவல் பரிமாற்றம் இல்லையென்றால் நிச்சயம் அங்கு சந்தோஷம் இருக்காது. நிச்சயம் பிரச்சனை தான் இருக்கும். கணவன் கஷ்டப்படுவார், மனைவி கஷ்டப்படுவார் என்பதற்காக இருவரும் சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. சொல்லக்கூடிய விஷயம் மகிழ்ச்சிக்கரமாக இருந்தாலும், கஷ்டப்படுத்தக்கூடிய விஷயமாக இருந்தாலும் இருவரும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். எந்தளவிற்கு மனதில் உள்ள விஷயங்களை பரிமாறிக் கொள்கிறீர்களோ? பிரச்சனை இருக்காது. உறவும் வலுப்பெறக்கூடும்.
கணவன் மற்றும் மனைவியின் உறவை வலுவுடன் வைத்திருக்க கட்டாயம் இருவரும் அவரவர் விருப்பத்திற்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். என்ன தான் விருப்பு வெறுப்பு இருந்தாலும் இருவரும் விட்டுக் கொடுத்து செல்லும் போது வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாகும். அவர்களின் தேவை மற்றும் விருப்பத்தை அறிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒருவேளை தேவையில்லை என்பதை உணர்ந்தால், முதலில் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். அடுத்தப்படியாக ஏன் என்பதை எடுத்துரைத்தாலே போதும். எவ்வித பிரச்சனையும் வாழ்க்கையில் இருக்காது.
மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடம் உள்ள சிறிய தொகையை வைத்துக்கூட சந்தோஷமாக வாழ வேண்டும். பொதுவாகவே உணர்வு பூர்வமான உறவுகளுக்கு இடையே காசு பணம் என்பது பெரிதாக இருக்காது. எந்தளவிற்கு அவர்களுடன் நேரம் செலவழிக்கிறோமோ? அதைத் தான் பெரிதாக கருதுவார்கள். பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள், அதிக நேரம் அவர்களுடன் செலவிடுங்கள், சின்ன சின்ன விளையாட்டுகளால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் மனைவியை சந்தோஷமாக வைத்திருந்தாலே போதும். எப்போதும் வீடு நிம்மதியான சூழலுடன் காட்சியளிக்கும்.
உறவில் நம்பிக்கை என்பது மிகப்பெரிய சொத்து. நம்பிக்கை இல்லையென்றால் என்ன செய்தாலும் தவறாக மாறிவிடும். முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான நடந்துக் கொள்ள வேண்டும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சந்தேகமின்மை ஏற்படாது, மன அழுத்தத்திற்கு எவ்வித இடமும் இருக்காது. எனவே உறவுகள் வலுவுடன் இருக்க வேண்டும் என்றால் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பதே நல்லது.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
உறவுகள் உடைந்தால் அதை ஒட்ட வைத்து புதுப்பிப்பது என்பது முடியாத காரியம் தான். எந்த உறவும் உடைந்துப்போனால் மீண்டும் பழைய பொலிவிற்கு வருவது கஷ்டம் என்பதோடு, பழையது எப்போதும் நீண்ட நாட்களுக்கு இருக்காது என்பதை மனதில் வைத்து உறவுகளுடன் மகிழ்ச்சியோடு வாழ கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com