தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக படம் தயாரித்து வரும் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றுள்ளது. லுஷ்வின் குமார் என்பவரை அவர் மணந்துள்ளார். திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷா ஃபிரான்ஸிஸ் உடன் காணப்பட்டது பேசு பொருளாகியுள்ளது. இருவரும் ஒரே மாதிரியாக தங்க நிறத்தில் ஆடை அணிந்து ஜோடியாக நிகழ்ச்சியில் காட்சியளித்தனர். ஆர்த்தியை பிரிந்த பிறகு ரவி மோகனுக்கும் - கெனிஷாவுக்கும் காதல் கிசுகிசுக்கப்பட்டது. அப்போது இருவரும் காதலை மறுத்த நிலையில் தற்போது வெளிப்படையாக ஜோடி கிளிகள் போல வலம் வருகின்றனர்.
யார் இந்த கெனிஷா ஃபிரான்ஸிஸ் ?
கெனிஷா ஃபிரான்ஸிஸ் பெங்களூருவை சொந்த ஊராக கொண்டவர். பாடகியான கெனிஷா ஃபிரான்ஸிஸ் கோவாவில் உள்ள கிளப்களில் பாடல் பாடி ரசிகர்களை குஷிப்படுத்துபவர். இவர் ஹீலிங் தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. ரவி மோகனுக்கும் - கெனிஷாவுக்கும் கோவாவில் சந்திப்பு ஏற்பட்டு இருவரும் பழக தொடங்கியதாக தெரிய வருகிறது. ஆர்த்தியை ரவி பிரிந்த பிறகு இருவருடைய திருமண முறிவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தும் இருந்தார். ரவி மோகன் தனக்கு நல்ல நண்பர் எனக் கூறிய நிலையில் ஐசரி கணேஷ் திருமண நிகழ்வில் ஜோடி கிளியாக தோன்றியிருக்கிறார்.
Grateful for your love and understanding.
— Ravi Mohan (@iam_RaviMohan) September 9, 2024
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
ரவி மோகனுக்கு விரைவில் திருமணமா ?
கடந்த ஆண்டு ரவி மோகன் ஆர்த்தி உடனான 14-15 வருட திருமண வாழ்க்கை முறித்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு குடும்பத்திற்குள் பல சண்டைகள் நடந்ததாக தகவல் கசிந்தது. தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை எண்ணி திருமண முறிவுக்கு ஒப்புக்கொள்ள போவதில்லை என ஆர்த்தி கூறியிருந்தார். இருவரின் விவாகரத்து வழக்கு விசாரணையில் உள்ளது. இது குறித்து ரவி மோகனும் பேசியிருந்தார். தற்போது நடக்கும் விஷயங்களை பார்க்கையில் அவர் விரைவில் கெனிஷா பிரான்ஸிஸை திருமணம் செய்யப் போகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ரவி மோகன் அடுத்ததாக பராசக்தி, ஜீனி, கராத்தே பாபு, தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ரவி மோகன் அடுத்ததாக பராசக்தி, ஜீனி, கராத்தே பாபு, தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation