Rashmika Mandanna : 'நான் மிகவும் வேதனைப்படுகிறேன்’! வைரலாகும் ராஷ்மிகாவின் போலி வீடியோ.. குரல் கொடுக்கும் திரைப்பிரபலங்கள்..

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
rashmika mandanna fake video online
rashmika mandanna fake video online

பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷ்னல் க்ரஷ் என அழைக்கின்றனர். தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ராஷ்மிகா ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். ராஷ்மிகா பிசியான நடிகையாக வலம் வந்தாலும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா லிஃப்டில் ஆபாசமாக உடையணிந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.அதை உண்மையான வீடியோ என நினைத்து பலரும் இணையத்தில் பகிர்ந்தனர்.ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்திருக்கிறது.மார்பிங் செய்யப்பட்ட வீடியோ குறித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டுள்ளார். ‘இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் டீப் ஃபேக் வீடியோவைப் பற்றி பேச வேண்டும்.

rashmika mandanna in black dress

இதுபோன்ற ஒன்று , எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது.இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகனாகவும், எனது பாதுகாப்பு மற்றும் ஆதரவாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை ஒரு சமூகமாகவும் அவசரமாகவும் நாம் கவனிக்க வேண்டும். ராஷ்மிகா மந்தனாவுக்கு ஆதரவாக சின்மயி, நடிகர் நாக சைதன்யா, மிருணாள் தாகூர் மற்றும் பல பிரபலங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.யத்தில் பதிவிட்டுள்ளனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP