நடிகை அமலா பால் தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து படங்கள் நடித்தார்.முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவியுடனும் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார். அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது.ஆனால் இந்த படத்தில் தைரியமாக நடித்ததற்காக பாராட்டுக்களும் குவிந்தன.
அமலா பால் நடிப்பில் தமிழில் கடைசியாக காடவர் என்ற படம் வெளியானது. இந்த படத்தை இவரே தயாரித்து நடித்திருந்தார்.அதையடுத்து மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அமலா பால் ஆன்மிகம் , யோகா, தியானம் என அனைத்திலும் ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர். இது குறித்து பல பதிவுகளை இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார். அடிக்கடி வெக்கேஷன் சென்று புகைப்படங்களை பதிவிடுவார்.
நடிகை அமலா பால் தனது காதலன் ஜெகத் தேசாய் திருமணத்திற்காக ப்ரபோஸ் செய்யும் வீடியோவை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பகிர்ந்து இரண்டு வாரத்திலேயே அமலா பாலுக்கு திருமணம் நடைப்பெற்றிருக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : ஓடிடியில் வெளியாகும் ‘இறுகப்பற்று’ திரைப்படம்.. எப்போது தெரியுமா?
இந்த புகைப்படத்தில் அமலா பால் பர்பிள் நிற லெஹங்காவை அணிந்திருக்கிறார். அணிகலன்களை பொறுத்தவரை கழுத்தில் சோக்கர் மற்றும் காதில் தோடு போட்டு ரசிக்க வைத்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை மினிமெல் மேக்கப்பையே போட்டிருக்கிறார். அமலா பாலின் உடைக்கு மேட்சாக ஜெகத் தேசாய் பர்பிள் நிறத்திலேயே ஷர்வானி அணிந்துள்ளார். இந்த புதுமண தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com