herzindagi
tamil celebrities  stars breakup

Kollywood Breakups : கோலிவுட் பிரபலங்களின் பிரேக்கப் ஸ்டோரி

கோலிவுட் பிரபலங்களின் பிரேக்கப்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த லிஸ்டில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருமே உள்ளனர். இந்த பிரபலங்கள் நிச்ச்சயம் தங்களது காதலை திருமணத்தில் முடிப்பார்கள் என ரசிகர்கள் நினைத்தனர். 
Editorial
Updated:- 2023-04-16, 11:09 IST

காதல் தோல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது, ஃபர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் என்பார்கள். ஆனால் அதே சமயம் பலருக்கு முதல் காதல் தோல்வியில் முடிகிறது. ஆனால் அந்த காதல் ஆராத வடுவாய் மனதில் நிற்கிறது. அதன் பின்பு எத்தனை காதலை சந்தித்தாலும் சரி, கல்யாணமே ஆனாலும் சரி ஒவ்வொருவருக்கும் முதல் காதல் ரொம்ப ஸ்பெஷல்.

பிரபலங்கள் வாழ்க்கையிலும் காதல் என்பது சகஜம். சில நடிகர், நடிகைகள் காதலித்து, அதை கல்யாணத்தில் முடிப்பார்கள். சில பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுவார்கள். அதை பிரேக்கப் என்று சொல்வது இன்னும் ஈஸியாக இருக்கும். அந்த வகையில் கல்யாணம் செய்வார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட் ஜோடிகள் பிரேக்கப் ஆன கதையை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த பதிவும் உதவலாம்:ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! இந்த தமிழ் புத்தாண்டுக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?

சிம்பு

நடிகர் சிம்பு நயன் தாராவை காதலித்து வந்தார். இவர்கள் கட்டாயம் திருமணம் செய்வார்கள் என அனைவருக்கும் நினைத்தனர். ஆனால் பல தனிப்பட்ட காரணங்களால் சிம்புவை நயன்தாரா பிரிந்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து சிம்பு மீண்டும் காதலில் விழுந்தார். நடிகை ஹன்சிகாவும் சிம்பு காதலித்து வந்ததனர். கோலிவுட்டில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் நயன் தாரா மற்றும் ஹன்சிகா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

nayanthara simbu

சமந்தா

நடிகை சமந்தா ஆரம்பகால சினிமா கெரியரில் நடிகர் சித்தார்த்தை காதலித்தது அனைவரும் அறிந்தது. இருவரும் பல விருது நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொண்டனர். பின்பு இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பிரிந்தனர். அதன் பின்பு சமந்தா, தெலுங்கு நடிகர் நாக்அ சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். ஆனாலும் யாரும் சற்றும் எதிர்பார்க்காத விஷயமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது.

நயன்தாரா

நடிகை நயன்தாரா சிம்புடனான பிரேக்கப்க்கு பிறகு நடடிக ர்பிரபுதேவாவை காதலித்தார். அவரின் பெயரை தனது கையிலும் பச்சௌ குத்தி கொண்டார். இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என தகவலும் வெளியாகியது. ஆனால் சில பல காரணங்களால் நயன்தாராவுக்கு பிரபுதேவாவுக்கு பிரேக்கப் ஆனது.

actor vishal

விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகரின் வாரிசை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் மிகச்வும் பொருத்தமான ஜோடி என ஊரே மொத்த கோலிவுட்டும் கிசுகிசுத்தது. ஆனால் கருத்து வேறுபாரு காரணமாக விஷாலுக்கும் அந்த நடிகைக்கும் பிரேக்கப் ஆனது. அதே போல் விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணமும் நின்றது.

த்ரிஷா

நடிகை த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை டேட் செய்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் பிரேக்கப் செய்தனர். அதன் பின்பு ராணா தனது நீன்ஆ ஆஆல் தோழியை கரம் பிடித்தார்.

இந்த பதிவும் உதவலாம்:தேசிய விருது வென்ற தமிழ் நடிகைகள் மொத்தம் இத்தனை பேரா!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com