நம்முடைய கூந்தல் வளர்ச்சியை கட்டமைப்பதில் கெரட்டின் என்ற புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, முடியின் அடர்த்தி, நீளம் மற்றும் வலிமை போன்றவற்றை கெரட்டின் தீர்மானிக்கிறது. எனவே, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு கெரட்டின் மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: Hair fall home remedy: ஒரு முட்டை இருந்தால் போதும்... முடி உதிர்வு பிரச்சனையை போக்கலாம்; இந்த 4 ஹேர்மாஸ்கை ட்ரை பண்ணுங்க
அந்த வகையில் கூந்தல் வளர்ச்சியை இயற்கையான முறையில் அதிகரிக்க வேண்டுமென்றால் கெரட்டினை தூண்டக் கூடிய பொருட்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த வரிசையில் முதன்மையான இடத்தை பெறுவது முட்டை. பார்ப்பதற்கு மிக சிறியதாக இருந்தாலும் நம்முடைய கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது. இதில் புரதம் மற்றும் பயோட்டின் ஆகிய இரண்டும் அடங்கி உள்ளன. இவை இரண்டும் இயற்கையான முறையில் கெரட்டினை அதிகரிக்க செய்கின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது வைட்டமின் ஏ-வாக மாறி கெரட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது தவிர தசைகளை ஆரோக்கியமான முறையில் வலுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். இதன் சுவை எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்.
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் பலரும் மீன் எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளது. மேலும், இதில் இருக்கக் கூடிய புரதச்சத்து முடியை வலுப்படுத்துவதுடன், பளபளப்பாகவும் மாற்றுகிறது. அதன்படி, கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் மீன்களை சாப்பிடலாம்.
மேலும் படிக்க: ஆளி விதை தரும் அதிசய பலன்கள் தெரியுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இதுதான் ரகசியம்!
சூரியகாந்தி விதைகளை வைட்டமின் ஈ-யின் ஆற்றல் மையம் என்று கூறலாம். இவை உச்சந்தலைக்கு ஊட்டமளித்து கெரட்டின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. எனவே, சூரியகாந்தி விதைகளை உங்கள் சிற்றுண்டியில் சேர்ப்பதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும்.
பெரும்பாலான கீரை வகைகளில் இரும்புச் சத்து, ஃபோலேட், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் முடியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் புரதம் ஆகியவை நிறைந்துள்ளன. இதன் காரணமாக நம்முடைய உணவில் அன்றாடம் ஏதேனும் ஒரு கீரை வகையை இடம்பெறச் செய்யலாம்.
இதில் வைட்டமின் ஏ மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் உள்ளன. இவை இரண்டும் இயற்கையான முறையில் கெரட்டின் உற்பத்திக்கு ஊட்டமளிக்கிறது. மேலும், இதன் சுவைக்காக பெரும்பாலனவர்கள் விரும்பக் கூடிய ஒரு காய்கறியாக கேரட் உள்ளது.
அதிகப்படியான புரதச்சத்து நிறைந்த அசைவ உணவுகளில் கோழி இறைச்சிக்கு தனித்துவமான இடம் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து அளித்து கெரட்டின் உற்பத்தியை கணிசமான அளவு அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்பவர்களின் விருப்ப உணவுகளின் பட்டியலில் கோழி இறைச்சி முதன்மையாக விளங்குகிறது.
அதனடிப்படையில், இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்துவது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com