பெரும்பாலும் குளிப்பதற்கு முன்னர் உடலில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுமாறு வயதானவர்கள் பலரும் கூறி நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில், எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கமாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: Foods to reduce menstrual pain: மாதவிடாய் நேரத்தில் அதிக வலி இருக்கிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்ப்பது நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்று. ஆனால், இன்றைய நவீன உலகில் இந்த பழக்கம் மறைந்து வருகிறது. ஆயுர்வேதத்தின்படி, குளியலுக்கு முன் எண்ணெய் தேய்ப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
சருமம், நமது உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு. உடலுக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்துகள் கிடைப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் வெளியிலிருந்தும் பராமரிப்பது அவசியம். இதற்கு, குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்ப்பது ஒரு சிறந்த முறையாகும். அதற்கான காரணங்களை இந்தக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
குளிக்கும்போது, நீர் நமது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை வறண்டதாக்குகிறது. ஆனால், குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்ப்பதால், சருமத்திற்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாகிறது. இது, சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, வறண்டு போவதைத் தடுக்கிறது. குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் முழுவதும் வெதுவெதுப்பான எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. பின்பு குளிக்கும்போது இந்த நச்சுகள் எளிதாக அகற்றப்படுகின்றன. இது சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்
வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு உடலை மசாஜ் செய்வது தசைகளைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் முழுவதும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால், சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, நாள் முழுவதும் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும், சருமம் எண்ணெயை எளிதில் உறிஞ்சிக் கொள்வதால், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுக்கு, சரும சுருக்கங்கள் மற்றும் முதுமைக்கான அறிகுறிகள் தாமதமாக தோன்றும். இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதுகாக்கிறது.
ஆகவே, தினமும் குளிப்பதற்கு முன் சிறிது நேரம் ஒதுக்கி, உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பது பல்வேறு நன்மைகளைத் தருவதோடு, நமது பாரம்பரிய பழக்க வழக்கத்தையும் மீட்டெடுப்பதாக அமையும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com