ஆசியாவிலேயே பணக்காரக் குடும்பமாக இருக்கும் அம்பானி குடும்பம் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சி அவர்களின் உழைப்பையும், தொழில் நேர்த்தியையும் காட்டுகிறது. அம்பானியின் மனைவியான நீதா அம்பானி, ஆரம்ப காலத்தில் இருந்தே அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
அம்பானியின் பிசினஸை ஆசியா அளவில் விரிவுப்படுத்தியதில் நீதா அம்பானியின் பங்கு பெரியது. வெறும் பிசினஸ் வொமனாக மட்டும் இல்லாமல், சிறந்த அம்மாவாக, சிறந்த மாமியாராக, தற்போது சிறந்த பாட்டியாகவும் உள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை விஷயங்களை கவனித்து கொள்ளும் நீதா அம்பானி தனது உடல் ஆரோக்கியத்திலும் அதிகளவு அக்கறை எடுத்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்:உடல் எடையை கங்கனா எப்படி குறைத்தார் தெரியுமா?
மேக்கப் தொடங்கி ட்ரெஸ், உடற்பயிற்சி, யோகா என நீதா அம்பானி தன்னை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல விஷயங்களை செய்கிறார். அதில் மிக மிக முக்கியமானது காலையில் அவர் எடுத்து கொள்ளும் டீ.
நீதா அம்பானி காலையில் எடுத்து கொள்ளும் டீயின் விலை 3 லட்சம் என சொல்லப்படுகிறது. இதை கேட்டதும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. நீதா அம்பானி தங்க கோப்பையில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர். ஜப்பான் தயாரிப்பான நோரிடெக் பிராண்டு தான் இந்த டீ கப்பை தயாரிக்கிறது. ஜப்பானில் மிகவும் பிரபலமான இந்த பிராண்டின், தங்க பார்டர் கொண்ட கப்பை தான் நீதா அம்பானி பயன்படுத்துகிறார்.
தங்க கப்பில் எடுத்து கொள்ளும் உணவு உடலுக்கு மிகுந்த ஆரொக்கியத்தை தரக்கூடியது எனவும் சொல்லப்படுகிறது. இந்த முழு கப் செட்டியின் விலை 1.5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஒரு செட்டில் 50 கப்கள் இருக்குமாம். இதை நீதா அம்பானி பேட்டில் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதா அம்பானியின் காலை உணவு மிகவும் எளிமையானது. நீதா அம்பானி காலை உணவில் முட்டை, பாதாம் மற்றும் வால்நட்ஸின் வெள்ளைப் பகுதியை சாப்பிடுகிறார். காலை உணவுக்கு முன் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறார். நீதா அம்பானி யோகா மற்றும் நீச்சல் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். இதற்குப் பிறகுதான் காலை உணவை எடுத்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்:ஸ்ருதி ஹாசன் உடல் எடையை குறைத்தது இப்படி தானா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com