இயற்கையாகவே கிடைக்கக் கூடிய ஒவ்வொரு பழங்களுக்கும் நிச்சயம் ஒரு மருத்துவ பயன் இருக்கும். அந்த வகையில், கிவி பழத்தில் இருக்கும் நன்மைகளை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க
உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் மந்தமான செரிமானம் போன்ற குடல் பிரச்சனைகள் இருக்கிறதா? அப்படியானால், உங்கள் உணவில் கிவி பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கிவி பழம் சரியானதாக அமைகிறது. அதன்படி கிவி பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கிவி உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை இயற்கையாகவே நீக்குகிறது. கிவியில் உள்ள தனித்துவமான நார்ச்சத்து, குடல் இயக்கத்தை மென்மையாகவும், எளிதாகவும், சீராகவும் மாற்றுகிறது என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உங்கள் குடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று போதுமான அளவு நார்ச்சத்து சேர்ப்பது தான். ஒரு கிவி பழத்தில் சுமார் 2-3 கிராம் நார்ச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மலச்சிக்கலை குணப்படுத்துவது மட்டுமின்றி ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் இதன் மூலம் மேம்படுத்த முடியும்.
கிவி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆக்டினிடின் (actinidin) என்ற இயற்கையான நொதி உள்ளது. இது புரதத்தை உடைக்க உதவுகிறது. குறிப்பாக இறைச்சி அல்லது பால் பொருட்கள் அதிகம் உள்ள உணவுகளை குடல் எப்படி கையாளுகிறது என்பதற்கு இந்த நொதிதான் காரணம். எனவே, நீங்கள் புரதம் நிறைந்த உணவுக்கு பிறகு அல்லது அதனுடன் கிவி பழத்தை சாப்பிட்டால், அது செரிமானத்திற்கு உதவக்கூடும்.
மேலும் படிக்க: முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த 5 டிப்ஸை மட்டும் பின்பற்றவும்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கிவியின் பங்கு குறித்து ஆராய்ச்சிகள் எடுத்துரைத்துள்ளன. தினமும் இரண்டு கிவி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது, சில வாரங்களுக்குள் மலச்சிக்கல் அறிகுறிகளை கணிசமாக குறைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கிவி நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிப்பதுடன், வீக்கத்தையும் குறைக்கிறது. இதேபோல், பல நன்மைகளும் கிவி பழத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது.
மருத்துவ ரீதியாக இவ்வளவு நன்மைகள் நிறைந்த கிவி பழத்தை நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை எளிதாக மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com