இந்த ஜென்மத்தில் நானும், சிவகார்த்திகேயனும் இணைந்து வேலை செய்ய வாய்ப்பில்லை - இசையமைப்பாளர் டி.இமான்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக  இசையமைப்பாளர் டி.இமான் பேட்டியளித்திருக்கிறார்.

sivakarthikeyan with d imman movies

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்க்ம்’ மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஊதா கலரு ரிப்பன்’, பாக்காதா பாக்காதா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், டி இமானும் எந்த ஒரு படத்திலும் இணையவில்லை.

இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இனி சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலை செய்யமாட்டேன்.அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

sivakarthikeyan d imman

சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி ஏன் மீண்டும் அமையவில்லை என தொகுப்பாளர் கேள்வி ஒன்று கேட்கிறார். அதற்கு டி.இமான் கூறியாதவது ‘ ‘சில பர்சினல் காரணங்களால் இந்த ஜென்மத்தில் நானும், சிவகார்த்திகேயனும் இணைந்து வேலை செய்ய வாய்ப்பில்லை.இதற்கு காரணம் அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணம் செய்ய இயலாது. அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் பிறந்தால் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது.சில விஷயங்கள் நான் மூடி மறைப்பதற்கான காரணம் குழந்தைகளுடைய எதிர்காலம் தான். ஊர் என்ன சொல்லுது என்பது எனக்கு பிரச்சனை இல்லை. நான் யாருன்னு எனக்கு தெரியும், என்னை படைத்தவர் யார் என்றும் தெரியும்’ என்று பதிலளித்துள்ளார்.டி.இமானின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி இருக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP