Actress Nayanthara : நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் என்ன தெரியுமா?

நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.

 
nayanthara latest instagram post

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நயன்தாரா வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் - நயன்தாரா 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.விக்கி, நயன் தம்பதிகள் வாடகை தாய் மூலம் இந்த ஆண்டு ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

நடிகை நயன்தாரா இதுவரை எந்த ஒரு சமூக வலைதளங்களில் இல்லாமல் இருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா எண்ட்ரி கொடுத்திருக்கிறார். புதிதாக ‘9 ஸ்கின் கேர்’ என்ற பிஸ்னஸையும் தொடங்கியிருக்கிறார்.இதற்கான ப்ரமோஷனை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து செய்து வருகிறார் . மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இந்த பிராண்டின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. லிப் பாம் கம்பேனி என்ற நிறுவனத்தையும் நயன்தாரா நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் ‘sometimes home is a person'என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் விக்னேஷ் சிவனை நயன்தாரா நெற்றியில் முத்தமிடுகிறார். நயன்தாரா பகிர்ந்த இந்த புகைப்படங்கள் பல லட்சம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

nayanthara photos viral

சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய நயன்தாராவுக்கு தற்போது 6.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். நயன்தாரா வெறும் 63 பேரை மட்டும் ஃபாலோ செய்கிறார். தொகுப்பாளினி டிடியில் தொடங்கி மிஷெல் ஒபாமா வரை ஃபாலோ செய்கிறார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP