கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அர்ஜுன் டெண்டுல்கர் சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மும்பையின் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ரவி கய் என்பவரின் பேத்தி சானியா சந்தோக்.
சானியா வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்
ரவி காய-வுக்கு Intercontinental Marine Drive என்ற ஹோட்டலும் மற்றும் புரூக்ளின் கிரீமரி (The Brooklyn Creamery) என்கிற ஒரு ஐஸ்கிரீம் பிராண்டின் உரிமையாளர். நிச்சயதார்த்த விழா மிகவும் ரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இரு குடும்பங்களின் சிறப்பு விருந்தினர்களும் நண்பர்களும் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இருப்பினும், டெண்டுல்கர் மற்றும் காய் குடும்பங்கள் நிச்சயதார்த்தம் குறித்து இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
மேலும் படிக்க: மாதம் சம்பளத்தை எதிர்பார்த்து வாழும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய மசோதா சொல்வது என்ன?
சானியா ஒரு பொது நபராக இல்லை, குறிப்பாக சமூக ஊடகங்களிள் அவராது பங்கு குறைவாகவே இருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, சானியா சந்தோக் மும்பையை தளமாகக் கொண்ட மிஸ்டர் பாவ்ஸ் பெட் ஸ்பா (Mr. Paws Pet Spa) & ஸ்டோர் எல்எல்பியில் நியமிக்கப்பட்ட கூட்டாளியாகவும் இயக்குநராகவும் உள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை
2025 ஐபிஎல் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முழு போட்டியிலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மெகா ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு தக்க வைத்துக் கொண்டது. சீசன் முழுவதும் அவர் பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காகவும் விளையாடி வருகிறார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர் தனது அக்கா இருக்கும் நிலையில், இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதே பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
மேலும் படிக்க: நீதா அம்பானியின் கார் விலை இவ்வளவா? இந்தியாவிலேயே இவரிடம் மட்டும் தான் இந்த ஆடி கார் உள்ளது!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation