கோவாவில் கடந்த 20ஆம் தேதி முதல் 54வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் பனாஜியில் உள்ள சியாம் பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் தொடக்க விழா நடைபெற்றது. வரும் 28ஆம் தேதிவரை இந்த விழா நடைபெறவுள்ளது.
விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன. திரையுலகில் ஓடிடி தளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்முறை ஓடிடி தளங்களின் படைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கோவா திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஐந்து படங்கள் திரையிடப்படுகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த பொன்னியின் செல்வன் பாகம் 2, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை, விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ், சம்யுக்தா விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் காதல் என்பது பொதுவுடைமை ஆகிய படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகின.
மேலும் படிங்கஹாட் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!
இதுவரை விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 2, காதல் என்பது பொதுவுடைமை ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் படம் டார்க் காமெடியை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் மவுனமொழி படம் என்று கூறப்படுகிறது. படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இதற்காக கோவா சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி அங்கு நடிகை குஷ்பூவுடன் கலகலப்பான கலந்துரையாடலில் பங்கேற்றார். குஷ்பூவின் ரேபிட் ஃபையர் கேள்விகளுக்கு விஜய் சேதுபதி அளித்த பதில்கள் அங்கிருந்த ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
குஷ்பூ : காமெடியா அல்லது சீரியஸா
விஜய் சேதுபது : காமெடி
குஷ்பூ : பணம் அல்லது ரோல் (கதாபாத்திரம்)
விஜய் சேதுபதி : கதாபாத்திரத்துடன் கூடிய பணம்
குஷ்பூ : வெற்றியிலிருந்து பாடம் கற்றீர்களா அல்லது தோல்வியிலிருந்து கற்றீர்களா
விஜய் சேதுபதி : இரண்டுமே
குஷ்பூ : கடற்கரை அல்லது மலை
விஜய் சேதுபதி : மலை மற்றும் கடற்கரை
குஷ்பூ : இந்தி அல்லது தமிழ்
விஜய் சேதுபதி : மொழி
குஷ்பூ : விருது அல்லது வெற்றி
விஜய் சேதுபதி : காதல்
குஷ்பூ : பேச்சு அல்லது அமைதி
விஜய் சேதுபதி : இசை
குஷ்பூ : சிறந்த ரொமாண்டிக் தருணம்
விஜய் சேதுபதி : இந்த நேர்காணலில் இருப்பது
மேலும் படிங்கபொங்கல் ரிலீஸ் - ஐந்துமுனை போட்டிக்கு தயாராகும் தமிழ் திரையுலகம்
கடைசி பதிலைக் கேட்டவுடன் ரசிகர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. சிறிது வெட்கப்பட்ட குஷ்பூவும் விஜய் சேதுபதி எதையும் மனதில் வைத்துக் கொள்ளமாட்டார் எனவும் அவரது வெளிப்படைத் தன்மைக்கு இதுவே உதாரணம் எனவும் கூறி ரேபிட் ஃபையர் கேள்விகளை நிறைவு செய்தார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation