Pavithra Lakshmi : இவ்வளவு சீக்கிரம் ஏன் போனீங்க? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி உருக்கம்..

நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா இறந்ததை இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார். 

cwc pavithra lakshmi mom died

நடிகை பவித்ரா லட்சுமி குறும்படங்கள், ஆல்பம் சாங் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றுள்ளார். எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்காத அங்கீகாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டி வரை சென்று 4- வது ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார்.

பவித்ரா லட்சுமி உல்லாசம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அம்மாவின் மறைவு

நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா இறந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருக்கிறார். இதற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

pavithra lakshmi

இந்த பதிவும் உதவலாம்:தளபதி 68 படத்தில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

அந்த பதிவில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து மனதில் தோன்றிவற்றை வார்த்தைகளாக எழுதியுள்ளார். ‘நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது . ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.நீங்கள் சந்தித்த அந்த 5 வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல் சொல்ல இப்போது நான் நினைப்பது. நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை சிறப்பாக செய்தீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.

image:instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP