லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவுக்கும் இளைய சூப்பர் ஸ்டார் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட தனுஷிற்கும் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது. நயன்தாராவின் Beyond the fairy tale ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில் நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இது தொடர்பாக 3 பக்கத்திற்கு ஒரு அறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக உலகம் முன் போலி முகமூடி அணிந்து கொண்டு அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி தனுஷ் வாழ்வதாக விமர்சித்துள்ளார். தனது ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் 3 விநாடி காட்சியை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக நயன்தாரா சுட்டிக்காட்டியுள்ளார். அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுஷின் பழிவாங்கும் எண்ணம் - நயன்தாரா
தவறாக இருக்கும் பல விஷயங்களை சரி செய்வதற்காக கஸ்தூரி ராஜாவின் மகனும் செல்வராகவனின் தம்பியுமான தனுஷிற்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். தந்தையின் ஆசிர்வாதத்தாலும் அண்ணனின் உதவியாலும் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்த நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்னை போல சுயமாக உருவான பெண் சினிமாவில் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு போராட்டமே காரணம். என்னை பற்றி அறிந்தவர்களுக்கு இது நன்கு தெரியும். என்னுடைய ஆவணப்படம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. இதில் என்னுடைய திரையுலக பயணம், காதல் வாழ்க்கை, திருமணம் பற்றி பல விஷயங்கள் உள்ளன. ஆனால் திரைபயணத்தில் முக்கிய படமான நானும் ரவுடி தான் இடம்பெறப்போவதில்லை. இதற்கு உங்களுடைய பழிவாங்கும் எண்ணமே காரணம். நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த இரண்டு வருடங்களாக உங்களிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ரி-எடிட் செய்துள்ளோம். நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள், காட்சிகள் ஏன் சில புகைப்படங்களை கூட பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. இதனால் நான் மனதளவில் உடைந்துபோனேன்.
தயாரிப்பாளர் என்றால் எதுவும் செய்யலாமா ? நயன்தாரா
ஆவணப்படத்திற்கு தனுஷின் நோட்டீஸ்
பணத்திற்காக நீங்கள் ஒப்புதல் வழங்கவில்லை என புரிந்து கொள்கிறேன். தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவும் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என தெரிய வருகிறது. என்னுடையBeyond the fairy tale எதிராக நீங்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். நானும் ரவுடி தான் படத்தளத்தில் சூட்டிங்கிற்கு பின்னால் எங்களுடைய செல்போனில் எடுத்த கொண்ட வீடியோக்களை (3 விநாடி) பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் இருக்கிறது. படத்தின் ஆடியோ லாஞ்ச்-ல் நீங்கள் அப்பாவி ரசிகர்களிடம் நல்லவர் போல் நடித்து அவர்களுக்கு பாடம் எடுக்கலாம். படத்தின் தயாரிப்பாளர் என்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியுமா ? என தனுஷிடம் சரமாரி கேள்விகளை நயன்தாரா கேட்டுள்ளார்.
மேலும் படிங்கஇந்திய ராணுவம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி!
சட்டப்படி நீதியை பெறுவேன் - நயன்தாரா
இந்த விவகாரத்தில் சட்டப்படி நீதிமன்றம் சென்று நியாயத்தை பெறுவேன். எனினும் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன்; கடவுளின் நீதிமன்றத்தில் யாரிடம் தார்மீக உள்ளதென தெரியும். படத்தின் ரிலீஸிற்கு முன்பு சொன்ன வார்த்தைகள் இன்று வரை ஆறாத வடுவாக உள்ளது. பிறரை டேமேஜ் செய்து ருசி பார்க்கும் எண்ணத்தை யாரிடம் காட்டாதீர்கள். என்னுடைய ஆவணப்படத்தை கண்ட பிறகு உங்களுடைய மனம் மாறும் என நம்புகிறேன்...
தனுஷ் பாணியிலேயே ஓம் நம சிவாயா என கூறி நயன்தாரா அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation