இந்திய ராணுவம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி!

ஆகச்சிறந்த நடிகையான சாய் பல்லவி தேவையின்றி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். சில வருடங்களுக்கு சாய் பல்லவி பேசிய வீடியோ திடீரென கவனம் பெற்றுள்ளது. தனது அகிம்சை நிலைப்பாடு குறித்து பேசும் போது இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்துள்ளார்.
image

சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இது நாட்டிற்காக போராடி உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் படையின் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையாகும். அமரன் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில் நடிகை சாய் பல்லவி சில வருடங்களுக்கு முன் பேசிய வீடியோ சர்ச்சையாக வெடித்துள்ளது. ரானாவுடன் நடித்த விராட பர்வம் படத்தின் போது சாய் பல்லவி பேசிய வீடியோவை குறிப்பிட்டு BOYCOTT SAI PALLAVI என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பரவி வருகிறது.

சாய் பல்லவி பேசியது என்ன ?

தனது அகிம்சை நிலைப்பாடு குறித்து பேசும் போது பாகிஸ்தானில் உள்ள மக்கள் நமது ராணுவத்தை தீவிரவாத கும்பல் என நினைக்கின்றனர். நாம் அவர்களை தீவிரவாதிகளாக நினைக்கிறோம். எனக்கு வன்முறை புரியவில்லை. மேலும் வன்முறை இந்த பிரச்னைகளையும் தீர்க்காது என்றார். இது சாய் பல்லவி 2022ல் பேசியது.

பசு பாதுகாப்பு பெயரில் வன்முறை

அதே போல காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றியும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை குறித்தும் கருத்து தெரிவித்தார். எனினும் தனக்கு அரசியல் நிலைப்பாடுகள் இல்லை என்றார். இந்த வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சாய் பல்லவிக்கு ஆதரவும் எதிர்ப்பும்

சாய் பல்லவி வன்முறை வீணான விஷயம் எனக் குறிப்பிட்டு இருந்தாலும் இணையத்தில் அவர் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. சிலர் சாய் பல்லவி இருதரப்பு பார்வையை விளக்கியதாகவும், பேசிய விஷயம் தவறுதலாக வேறு எங்கோ இணைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அழகாக இருக்கும் பெண்கள் அறிவாக இருந்திட அவசியமில்லை என சாடியுள்ளனர். இந்திய ராணுவத்தை பற்றி புரிதல் இன்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம் என விமர்சித்துள்ளனர்.

மேலும் படிங்க"உங்கள் மகனாக அண்ணனாக தம்பியாக உழைப்பேன்" மாநாட்டில் தவெக தலைவர் எழுச்சியுரை

இங்கு ஒரு குத்து அங்க ஒரு குத்து

இந்த விவகாரம் பூதாரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை சாய் பல்லவி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்துள்ளார். தேசிய போர் நினைவிடம் ஒரு புனித கோயில் என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP