பிக்பாஸ் சீசன் 7 இல் சீரியஸ் கேம் தொடங்கிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்குப் போட்டியில் டஃப்கள் நிறைந்து காணப்படுகின்றன. தன்னை குறி வைக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் விமர்சனம் செய்வதை தாங்க முடியாத மாயா தானும் ஒரு மனுஷி என்பதை சரவணனிடம் தெரிவித்து இருந்தார். மாயா தனது நிலைப்பாட்டில் பிக்பாஸ் 7 சீசனில் தெளிவாகத் தெரிவித்து இருக்கின்றார்.
பிக்பாஸ் சீசன் 7 ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த ரேங்கிங் டாஸ்கில் முதல் ரேங்க் பெறுபவர்கள் வின்னர் தேர்வு செய்ய வேண்டும் 15ஆம் ரேங் பெறுபவர்கள் எவிக்ஷ்னுக்கு தயாராகின்றனர் என்று சொல்லப்பட்டது. பிரதீப் தான் சினிமா கலைஞானக இந்த வாய்ப்பை முதலாம் இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும், வேண்டுமென்றால் தன்னை சாகடித்து விட்டு இந்த இடத்தை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கின்றார். தன் வாழ்நாளில் தனது லட்சிய கனவான பெரிய நடிகன் ஆகும் வாய்ப்பைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை அவர் உணர்ந்து பேசியிருந்தார். அதற்காகப் பிரதீப் மெனக்கெடுகின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.
பிக்பாஸ் சீசன் 7 தினசரி புது புது டாஸ்க் புதிய அனுபவங்கள் என மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன. மனிதன் எப்படிப்பட்டவன் அவனைத் தொடர்ந்து கண்காணித்தால் அவனது சிந்தனைகள் எப்படி இருக்கும் என்ற ஒரு படிப்பினையை பிக்பாஸ் சீசன் ஏழு மூலம் நாம் பெறலாம். காலங்கள் சூழல்கள் மாறும்போது மனித நிறம் மாறும் இணைந்திருந்து செயல்பட்டவர்கள் மாறலாம். எலியும், பூனையுமாக இருந்தவர்கள் நண்பர்கள் ஆகலாம் ஆகிய அனைத்து உதாரணங்களும் பிக்பாஸ் போட்டியாளர்கள்மூலம் நாம் பார்க்க முடிகின்றது.
மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 ஹவுஸ் மேட்டுகளின் கடின கடந்துவந்த பாதை டாஸ்க்
பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் பிரதீப், விஷ்ணு ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டனர் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் நிக்சனை விட அதிகமாகப் பிக்பாஸ் வீட்டில் பாடியாத சொல்ல, அதற்குப் பதில் தரும் விதமாக, என்ன செய்தாலும் விஷ்ணு உடன் இருக்கும் போட்டியாளரைக் காயப்படுத்தக் கூடாது என்று பேசுகின்றார். நிக்சனை விடத் தான் அதிகமாகப் பாடியதாகப் பிரதீப் தெரிவிக்க அதற்கு விஷ்ணு கொடுத்த பதில் தான் அது ஆனால் ஒரு விதத்தில் பிரதீப் நிக்ஸனை அவரது திறன் வெளிவரத் தூண்டி விடுகிறார், நிக்சன் பதிலுக்குப் பாடி இருக்கலாம் இதுவரை நிக்சன் குரல் அங்குக் பலமாகக் கேட்கவில்லை என்பதும் ஒரு ஏமாற்றமாகத் தான் இருக்கின்றது இதற்குப் பிறகாவது நிக்ஸன் பாடத் தொடங்கலாம்.
மேலும் படிக்க:பிக்பாஸ் சீசன் 7 சாபக்கல் டாஸ்க்கில் டார்கெட்டாகும் கூல் சுரேஷ்
விளையாட்டு விளையாட்டாக இருக்க வேண்டும் என்பதைப் போல் இருந்தாலும் எந்த டாஸ்க் வைத்தாலும் விஷ்ணு யாருடனாவது சண்டை போடுவது, குரலை உயர்த்துவது என்று குமுரிக்கொண்டே இருக்கின்றார். இதற்கிடையில் தனி ஆட்டத்தை ஆடுவதற்கு தயாராகின்றார் ரவீனா. இதனால் மிகவும் மனமுடைந்து காயமடைகின்றார் மணி இதை ஒரு விதத்தில் புரிந்து என்ன ஆனது என்று மணியிடம் விசாரித்துப் ரவீனா சமாதானம் செய்கின்றார். பூர்ணிமா எப்பொழுதும் யாரையாவது குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறம் என்பதை இந்தப் பிக்பாஸ் நமக்குக் காட்டுகின்றது. நாம் இந்த உலகில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிக்பாஸ் தான். பிக்பாஸ் சீசன் 7 கலகலவென நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த வாரம்வரை மிகுந்த உறுதியுடன் காய்களை நகர்த்தி சரியாக விளையாடுகின்றவர் யார் என்று கேட்டால் அதில் பிரதீப், யுகேந்திரன் ஆகியோரை குறிப்பிடலாம். அடிக்கடி கோபபட்டு சண்டை யிடுவதில் விஷ்ணு மற்றும் மாயா ஆகியோரை குறிப்பிடலாம். அடுத்த வாரம் 5 பேர் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்டு கார்டாக வரவுள்ளனர். அவர்களது வருகை ஆட்டத்தை எப்படி கொண்டு போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation