பிக்பாஸ் சீசன் 7 ஜோராகப் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வாரம் சுமால் பாஸ் வீட்டிற்கு மறுபடியும் விஷ்ணு, வினிஷா, பூர்ணிமா, மாயா, அக்ஷயா பிரதீப், விக்ரம் சரவணன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் சுமால் ஹவுஸ் வீட்டிற்கு சென்றனர். இவர்கள்தான் இந்த வாரம் குக்கிங் அனைத்தும் பார்த்துக் கொள்ள வேண்டும். போன வாரம் செய்த மாதிரி ஸ்ட்ரைக் செய்ய முடியாது. ஆகையால் திறம்பட வேலை செய்தால் அடுத்த வாரம் சுமால் பாஸ் வீட்டுக்குப் போக வேண்டியது இல்லை. அது அவர்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும்.
இந்த வாரம் சுமால் பாஸ் வீட்டிற்கு சென்றவர்களில் புதிதாகச் சென்றவர்கள் வினிஷா விக்ரம் சரவணன் பூர்ணிமா.
இன்றைய ராசிபலன் கூல் சுரேஷ் சொல்லும்போது அவருடைய டாஸ்க் படு ஜயாகப் பேசினார். அப்போது உருவக் கேளி விசித்ராவை செய்து பேசியதனால் தவறை உணர்ந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பின்பு மாயாவை கிண்டல் அடிக்க மாயா அதனை எதிர்த்துக் கருத்து தெரிவித்து கண்ணீர் விடவும் செய்தார். கூல் சுரேஷ் ஒரு காமெடி பீஸ் என்பதை ஒவ்வொரு முறையும் காட்டிக் கொண்டு வருகிறார். அவர் இன்றைய ராசிபலனில் மணி மற்றும் ரவீனாவையும் விட்டு வைக்கவில்லை இப்படியாகப் பிக்பாஸ் வீடு நகர்கின்றது.
விஷ்ணு எப்போதும் ஹைப்பர் ஆகவே இருப்பது பிக்பாஸ் வீட்டில் நல்ல ஒரு என்டர்டெயின்மென்ட் ஆகவே இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் கண்டபடி கத்துவதில் கில்லாடியாக இருக்கிறார். விஷ்ணு, ரவீனா காபி கேட்டபோது காபி கொடுக்குமாறு பூர்ணிமாவை ஏவி விட்டு அவர்களிடம் சண்டை இட்டுப் பூர்ணிமாவை பர்சனல் அட்டாக் செய்து தன்னை ஹைலைட் செய்து கொள்கிறார். பூர்ணிமாவை இன்சல்ட் செய்யும் விதமாகப் பேசினார்.
விஷ்ணு எப்படியோ அடுத்த வாரம் வெளியேறும் வாய்ப்பு என்ற பயம் அதற்குள் தனக்கான கூட்டத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விஷ்ணு அவசர குடுக்கியாகச் செயல்படுகிறார். அவரது பேச்சுக்கள் மிரட்டல்கள் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதாகப் பிக்பாஸ் ஹவுஸ் மேட்டுகள் உணர்கின்றனர் இதனை அடுத்து மன்னிப்பு கேட்கவும் முன் வருகிறார்.
கடந்து வந்த பாதை என்று பிக்பாஸில் ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த கடினமான பாதைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். யுகேந்திரன் தன்னைப் பற்றிப் பகிரும்போது பிக்பாஸ் வீட்டில் உணர்வுபூர்வமாக இருந்தது தான் யுகேந்திரன் வாசுதேவன் என்பதையும் வாசுதேவன் பெயர் தனது அப்பாவின் பெயர் என்றும் அது தனக்கு பல பாதைகளை எளிதில் திறந்து விடும் என அனைவரும் கணித்தனர். ஆனால் எனக்கு அது அப்படி அமையவில்லை என்பதையும் அது எனக்கு டிஸ்அட்வான்டேஜ் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தார். தன்னை தானாக இந்த உலகம் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தவிப்பு அவரிடம் இருந்தது.
விசித்திரா பேசும்போது ஒரு பெரிய மனிதருக்குக் கீப்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சாய்ஸ் இல்லை தன் வாழ்வில் நல்லப் பாதைக்குச் செல்லத் தனக்கு எது வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தாமாக நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் எனப் பேசி இருந்தார்.
ரவீனா தனது வாழ்வின் ஒரு கடினமான காலகட்டத்தை சந்திப்பதையும் அரசு உதவிப் பெறும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டதையும் விளக்குகின்றார்.
மேலும் படிக்க: பிக்பாஸ் வீட்டில் காப்பற்றப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்
நிக்சன் பேசும்போது சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டதையும் தன் வாழ்வின் அடைந்த துயரத்தையும் பிச்சை எடுப்பவர்கள் தனக்கு கொடுத்த உணவையும் பேசுகின்றார்.
நடன இயக்குநராக இருக்கும் மணி பேசும்போது தான் தேர்வானபோது நடனப் போட்டியில் அப்பா இறந்து விட்டதையும் தெரிவித்து இருக்கின்றார்.
அக்ஷயா தனது பயணத்தைப் பற்றித் தெரிவிக்கும்போது தான் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் திருப்தி அடையவில்லை என்று தெரிவித்திருக்கின்றார் செய்யும் செயலில் முன்னேற்றம் அடைய தான் மெனக்கடுவதையும் தெரிவித்திருந்தார்.
கூல் சுரேஷ் படிப்பு, அண்ணன் தனக்காகச் செய்த உதவி சிறுவயது முதல் தான் கடந்தவந்தப் பாதையைக் கண்ணீருடன் விவரிக்கின்றார்
இவ்வாறாகப் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதையைத் தெரிவித்து வரப் பிக்பாஸ் பாராட்டவும் செய்திருக்கின்றார். அக்ஷயா மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்றார். அப்பாடா என்று இந்தச் சீசன் 7 பிக் பாஸ் மூச்சு விட அப்படியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. அடுத்து என்ன டாஸ்க் என்று ஒவ்வொருவரும் தயாராக வேண்டி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் நடக்கும் சரவெடி டாஸ்க்குகள் ஜெயிலுக்கு போன வினுஷா அக்ஷ்யா
Image source : google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com