Big boss season 7: பிக்பாஸ் சீசன் 7 சாபக்கல் டாஸ்க்கில் டார்கெட்டாகும் கூல் சுரேஷ்

பிக்பாஸ் சீசன் 7ல்  சிரித்துக் கொண்டே சாபக்கல் டாஸ்க்கில் சிக்கிய கூல் சுரேஷ் 

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-18, 15:36 IST
oc

விறுவிறுப்பாகப் போகும் பிக்பாஸ் டாஸ்க் மேல பாஸ்கர் வைத்து எல்லோருக்கும் ஒரு விதம் ஹலோ கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. பிக் பாஸ் சீசன் 7 மூன்றாவது வாரத்தைத் தொட்டு கொண்டிருக்கின்றது. இந்நேரத்தில் சாபக்கல் டாஸ்கானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த டாஸ்க் ஐந்து ஓட்டுகள் கூல் சுரேஷிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சாபக்கல் டாஸ்கில் விளையாட யாரை நாமினேட் செய்கிறார்களோ அவர்களை எதற்காக நாமினேட் செய்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். முதலில் விசித்ரா நாமினேட் செய்தார் அதன்படி விசித்திரா பிக் பாஸ் வீட்டில் கூல்சுரேஷ் நெருக்கமாக இருக்கவில்லை என்பதை தெரிவித்து நாமினேட் செய்தார். மேலும் அவரைத் தொடர்ந்து நாமினேட் செய்த ஜோவிகா சுரேஷ் கிளவராக விளையாடுகிறார் என்றும், பேலன்ஸ் செய்யத் தவறுகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் சாபக்கல் டாஸ்க்கில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்தினை வெளியிட்டு இருந்தனர். கூல் சுரேஷ் அக்ஷயாவை நாமினேட் செய்திருந்தார். இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் நாமினேட் செய்தவர்கள் கவுன்ட் எண்ணிக்கையில் கூல் சுரேஷ் அடுத்த வாரம் நேரடியாக எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகின்றார் என்பது தெரிகின்றது.

பிக்பாஸ் கூல் சுரேஷ் சாபக்கல்லை கையில் வைத்துக்கொள்ளக் கூறுகின்றார். அதன்படி அவர் அந்தச் சாபக் கல்லைக் கீழே வைக்கக் கூடாது. மேலும் இந்தச் சாபக்கல்லை குளிக்கும் போதும் என்ன செய்வது என்று கூல்சுரேஷ் கேட்கும்போது அவரும் பணி செய்கின்றார்.

BB team

இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டில் யாரெல்லாம் சரியாக விளையாடுகிறார்கள் என்று கூல்சுரேஷ் மற்றும் விசித்திரா பேசிக் பேசிக் கொண்டிருக்கையில் யுகேந்திரன் விக்ரம் சரவணன் ஆகியோர் விளையாடத் தெரிந்து விளையாடுகின்றனர் என்பதை விசித்திராவும் பேசிக்கொள்கின்றார். பிக்பாஸ் வீட்டில் மக்கள் ஓட்டெடுப்பின்படி பாதுகாக்கப்படுபவர்கள் மற்றும் குறைந்த ஓட்டுகள் பெற்றவர்கள் மக்கள் ஓட்டின் மூலம் தெரியவரும்.

யுகேந்திரன் கேப்டனாக இருப்பதால் அவருக்கு நெளிவு சுழிவுகள் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. எந்த ஒரு இடத்திலும் தேவையற்ற சிக்கல்களை இதுவரை உருவாகாமல் பார்த்துக் கொள்கிறார். அவர் இதற்கு முந்தைய வாரங்களில் கேப்டனாக இல்லாத போதும் இதே பொறுப்பினை பட்டும் படாமல் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யுகேந்திரன் சிறந்த பாடகர் மற்றும் நல்ல நடிகர் விஜய், அஜித்துடன் நடித்துள்ளார். பன்முகத்திறன் கொண்டவர் இப்படி இருக்க தனக்கான ஒரு அடையாளத்தை இந்த வயதிலும் உருவாக்க வேண்டும் என்று முனைந்திருப்பது உண்மையில் சாதிக்க வயது தடை ஏது என்பதை நமக்குத் தெரிவிக்கின்றது. மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் என்பதை இப்போது மாற்ற வேண்டும் என்று அவர் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்துகிறார். நிச்சயமாக அவர் இந்த வாரமும் நிரூபித்து விட்டார் இன்னும் நான்கு ஐந்து நாட்கள் இருக்கின்றது பார்ப்போம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP