big boss season 7 : பிக்பாஸ் சீசன் 7 மிரள வைக்கும் வைல்டு கார்டு எண்ட்ரிகள் மிரட்டும் வீட்டினர்

பிக்பாஸ் சீசன் 7 எதிர்ப்பாரத வைல்டு கார்ட் என்ட்ரிகள்  வம்பிழுக்கும் ஹவுஸ்மேட்டுகள் 
  • Shobana M
  • Editorial
  • Updated - 2025-07-22, 12:09 IST
ID

பல்வேறு டாஸ்குகள் அடிதடி தள்ளுமுள்ளு எனப் பல நிலைகளைக் கடந்து பிக்பாஸ் சீசன் 7வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. முழுமையாகப் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதில் இருக்கும் டஃப்புகள் அனைத்தும் புரியும். அந்த வகையில் இந்த வாரம் ஐந்து புதிதாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே மிகுந்த திறமைசாலியான போட்டியாளர்கள் என்றே சொல்லலாம். ஒருவர் வாய்ப்பேச்சில் திறமைசாலி பட்டிமன்ற பேச்சாளர், அன்ன பாரதி பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அடுத்ததாக வைல்டு கார்டு ரவுண்டில் முதன் முதலாகக் கலந்து கொண்டவர் யார் என்றால் அது ரக்ஷிதாவின் கனவர் தினேஷ் அவருக்குப் பின், அன்ன பாரதி மற்றும் ராஜா ராணி சீரியலில் நடித்த அர்ச்சனா அத்துடன் தமிழ் ரேடியோ ஜாக்கியான பிராவோ அவரும் பிக்பாஸ் வைல்டு கார்டில் கலந்து கொண்டுள்ளார்.

bboss

மேலும் கானா பாலா இவரிடையேயும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தினேஷ் உள்ளே நுழைந்ததும் பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா பிரதீப், நிக்சன் ஆகியோர் தனியாகப் புதிதாக வந்தவர்கள் ஏதாவது பேசினால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மாயா ஆரம்பிக்க, அவரைப் பின்பற்றிப் பிரதீப் பேசுகின்றார். புதிதாக வந்திருப்பவர்களை வரவேற்க வேண்டும் என்று தினேஷ் கூலாகப் பேசிச் செயல்பட தொடங்கி விட்டார் என்றே கூறலாம்.

அர்ச்சனா பிரமோவில் தடாலடி ஆளாக இருக்கின்றார். அவர் ராஜா ராணியில் இருந்ததை விடப் பல மடங்கு அதிகமாகக் கண்ணீர் மற்றும் பிரச்சனைகள் உருவாக்கி மாயா ஆகியோரிடையே விவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றார். வந்த முதல் நாளிலே வைத்துச் செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. பார்ப்போம் அடுத்தது என்னவென்று பிக்பாஸ் வீட்டில் வேறு என்ன மாறுபாடுகள் இருக்கும் என்று பார்போம். ஆனால் ஒருவருக்கு ஒருவர் முதல் சந்திப்பிலேயே முரண்பாடுகளுடன் இருப்பது வீட்டின் அமைதியை குறைக்கும் என்று தெரிகின்றது.

கடந்த வாரம் எவிக்ஷனில் கமல் கொடுத்த முடிவுகள் பெரும் அதிர்ச்சியாக இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டனர். வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுரேந்திரன் மிகச் சிறந்த கேமை விளையாடினார் என்று தான் சொல்ல வேண்டும். வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி அவரிடம் இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து இருக்க முடியவில்லை. உண்மையில் அதிர்ச்சியாக இருந்தாலும் கேமாக நினைக்கும்போது எதிர்பாராத மாற்றங்கள் வரத்தான் செய்கின்றன.

பிக்பாஸ் வீட்டில் சுவாரசியங்களை அதிகப்படுத்தும் விதமாக ஐவர் உள்ளே நுழைந்து இருக்கின்றனர் பார்ப்போம், இவர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கின்றது ஏற்கனவே உள்ளே இருக்கும் பிக்பாஸ் வீட்டுப் போட்டியாளர்கள் இவர்களிடையே பெரும் கருத்து மோதல்கள், வேறுபாடுகள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதுவரை அன்னபாரதி சிரித்து மட்டுமே அனைத்தையும் சமாளிக்கின்றார். ஆனால் அர்ச்சனா உள்ளே வந்ததும் தடாலடியாக இறங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தினேஷ் வந்ததும் கொஞ்சம் கெத்து காட்ட ஆரம்பித்தார் ஆனால் தனக்கு பின்பு நான்கு பேர் வருகிறார்கள் என்பதும் அவருக்கும் புதிதாகத்தான் அமைந்தது. எப்படியோ இந்தக் கேம் விறுவிறுப்புக்கு இனி பஞ்சம் இருக்காது. மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய வாரமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் ரவீனா மற்றும் மணி இருவரும் தனியே நின்று பிக்பாஸ் விளையாடுகின்றனர் என்று தெரிகின்றது. அவர்கள் விலகி இருக்கும்போது இது புரிகின்றது. பூர்ணிமா சிறந்த கேப்டனாகப் புகழ்மேல் புகழ்பெற்று பிக்பாஸ் வீட்டில் அனைவராலும் போற்றப்பட்டவர். அது மகிழ்ச்சியையும் பூர்ணிமாவுக்கு உண்டாக்கியது. இன்னும் என்னென்ன மாற்றங்கள் இந்தக் கேமில் நடக்கும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

Image source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP